Kathir News
Begin typing your search above and press return to search.

இலகுவான எடை கொண்ட நாசில் கருவியை உருவாக்கி புதிய சாதனை படைத்தது இஸ்ரோ..!

இலகுவான எடை கொண்ட நாசில் கருவியை உருவாக்கி புதிய சாதனை படைத்தது இஸ்ரோ..!

SushmithaBy : Sushmitha

  |  18 April 2024 12:31 PM GMT

விண்வெளி துறையில் இஸ்ரோ புதிய ஆராய்ச்சிகளையும் கண்டுபிடிப்புகளையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ராக்கெட்டில் உந்து விசைக்காக எடை குறைந்த நாசில் கருவியை உருவாக்கி புதிய சாதனையை இஸ்ரோ படைத்துள்ளது.

அதாவது திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மையம் ராக்கெட் தொழில்நுட்பத்தில் புதிய கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்துவதற்கு தேவையான உந்துவிசையை வழங்க நாசில் என்னும் கருவி பயன்படுத்தப்படுகிறது. இதற்கு பதிலாக தற்போது மிகவும் லேசான குறைந்த எடை கொண்ட நாசில் கார்பன் மூலக்கூறு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கண்டுபிடிப்பு மூலம் ராக்கெட்டின் உந்த விசை மற்றும் எரிசக்தி ஆற்றல் திறன் போன்றவை மேம்படுவதோடு நாசியில் கருவியின் எடையும் 67% வரை குறையும் என கூறப்படுகிறது. இதனால் இதற்கு முன்பாக பி எஸ் எல் வி ரக ராக்கெட்டை நான்காம் நிலையில் நாசர்களுடன் கூடிய இரண்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வந்த நிலையை இந்த புதிய நாசில் மாற்றி 15 கிலோ கொண்ட ஆய்வு கருவிகளை பிஎஸ்4 நிலையின் மூலம் விண்ணுக்கு செலுத்த முடியும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

மேலும் இதற்கான பரிசோதனையை கடந்த மார்ச் 19 மற்றும் ஏப்ரல் 2 ஆகிய தேதிகளில் வெற்றிகரமாக நடத்திய இஸ்ரோ திட்டமிட்டபடி இந்த கருவி சிறப்பாக செயல்படுகிறது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News