தேர்தலுக்குப் பின் எதிர் காலத்திற்கான புதிய பயணம் தொடங்கும்.. பிரதமர் மோடி பெருமிதம்..
By : Bharathi Latha
புதுதில்லி பாரத மண்டபத்தில் பிரதமர் நரேந்திர மோடி 2550-வது பகவான் மகாவீரர் நிர்வாண மகோத்சவத்தை தொடங்கி வைத்தார். பகவான் மகாவீரரின் சிலைக்கு அரிசி மற்றும் மலர் இதழ்களால் அஞ்சலி செலுத்திய மோடி, பகவான் மகாவீரர் சுவாமி குறித்து "வர்த்தமான் மே வர்தமான்" என்ற தலைப்பில் பள்ளிக் குழந்தைகள் நடத்திய நடன நாடக விளக்கக்காட்சியைக் கண்டார். இந்த நிகழ்ச்சியின் போது நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் பிரதமர் வெளியிட்டார்.
கூட்டத்தினரிடையே உரையாற்றிய பிரதமர், இந்த அற்புதமான பாரத மண்டபம் 2550-வது பகவான் மகாவீர் நிர்வாண மகோத்சவத்திற்கு சாட்சியாக உள்ளது என்று குறிப்பிட்டார். "வர்த்தமான் மே வர்தமான்" என்ற தலைப்பில் பகவான் மகாவீரர் சுவாமி குறித்து பள்ளிக் குழந்தைகள் வழங்கிய நாட்டிய நாடகத்தை குறிப்பிட்ட பிரதமர், பகவான் மகாவீரரின் விழுமியங்கள் மீதான இளைஞர்களின் அர்ப்பணிப்பு மற்றும் உறுதிப்பாடு ஆகியவை நாடு சரியான திசையில் முன்னேறி வருவதற்கான அறிகுறியாகும் என்று கூறினார். இந்த நிகழ்ச்சியில் நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டதைக் குறிப்பிட்ட அவர், ஜெயின் சமூகத்தினரின் வழிகாட்டுதல் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அமிர்த காலத்தின் யோசனை வெறும் ஒரு தீர்மானம் மட்டுமல்ல, அது ஒரு ஆன்மீக உத்வேகம் என்றும், இது இறவாமை மற்றும் நித்தியத்தை நோக்கி வாழ நம்மை அனுமதிக்கிறது என்றும் பிரதமர் மோடி அடிக் கோடிட்டுக் காட்டினார். இந்தியாவை பூமியில் மிக நீண்ட காலம் வாழும் நாகரிகமாகவும், இன்று மனிதகுலத்தின் சொர்க்கமாகவும் மாற்றியுள்ளது என்று பிரதமர் கூறினார். "இந்தியா தனக்காக சிந்திக்காமல் அனைவருக்காகவும் சிந்திக்கிறது, அனைவரையும் நம்புகிறது. இந்தியாதான் பாரம்பரியம் பற்றி மட்டுமல்ல, கொள்கைகளைப் பற்றியும் பேசுகிறது. உடலில் உள்ள பிரபஞ்சத்தைப் பற்றியும், உலகில் பிரம்மாவைப் பற்றியும், உயிரினங்களில் சிவனைப் பற்றியும் பேசுவது இந்தியா" என்று அவர் கூறினார்.
Input & Image courtesy: News