Kathir News
Begin typing your search above and press return to search.

ரேஷன் அரிசியை கடத்தி பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்தரமானது - அண்ணாமலை கண்டனம்..!

ரேஷன் அரிசியை கடத்தி பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்தரமானது - அண்ணாமலை கண்டனம்..!
X

SushmithaBy : Sushmitha

  |  24 April 2024 6:13 PM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பகுதியில் சிறுவனை வைத்து ஒரு கும்பல் வீடு வீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கி வரும்படி மிரட்டி உள்ளது. அந்த மிரட்டலுக்கு பயந்து அச்சிறுவனும் விடுவீடாக சென்று ரேஷன் அரிசியை வாங்கி வந்துள்ளார், ஒரு கட்டத்தில் இதனை மறுத்த அச்சிறுவனை கார்த்திக் என்பவர் கடுமையாக தாக்கியுள்ளார். இதனை தட்டி கேட்ட வழக்கறிஞர் மாரிச்செல்வன் வீட்டில் கார்த்திக் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பெட்ரோல் குண்டு வீசி உள்ளனர். இதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.


அதாவது, தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில், ரேஷன் அரிசி கடத்தும் கும்பல், வழக்கறிஞர் ஒருவர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட பாம்பு கார்த்திக் என்ற திமுகவைச் சேர்ந்த நபர், கடந்த ஆண்டே, ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில், காவல்துறையினரால் தேடப்பட்டு வந்தவர். திமுக தலைமைக்கும், அமைச்சர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் நெருக்கமான நபராக அறியப்படும் இந்த பாம்பு கார்த்திக், ஒவ்வொரு வீடுகளில் இருந்தும் ரேஷன் அரிசியை வாங்க வேண்டும் என்று சிறுவர்களை கட்டாயப்படுத்துவதாகவும், அதனைத் தட்டிக் கேட்ட வழக்கறிஞர் திரு.மாரிசெல்வம் அவர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியதாகவும் தெரிகிறது.

கோவில்பட்டி சுற்றுவட்டாரத்தில் இருந்து மட்டும், மாதம் 3.5 டன் ரேஷன் அரிசி வெளிமாநிலங்களுக்குக் கடத்தப்படுவதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு, இந்தப் பகுதியில், ரேஷன் அரிசி கடத்தல் விவகாரத்தில், துரைப்பாண்டி என்பவர் கொலை செய்யப்பட்டுள்ளார். எனினும், தொடர்ந்து ரேஷன் அரிசி கடத்தல் நடந்து வருவது, கடத்தல்காரர்களின் பின்புலத்தைக் காட்டுகிறது. ஆளுங்கட்சி என்பதால், காவல்துறையினரோ, தமிழக உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவோ எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள், அனைவருக்கும் உணவு கிடைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில், ரேஷன் கடைகளில் அரிசி வழங்கும்போது, திமுகவினர் ரேஷன் அரிசியைக் கடத்தி, பிற மாநிலங்களுக்கு விற்பனை செய்து கொழுப்பது கீழ்த்தரமானது. ரேஷன் அரிசி கடத்துவது ஆளுங்கட்சியினர் என்பதால், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, மேலும் பல குற்றச் சம்பவங்களுக்கே வழிவகுக்கும் என்று பதிவிட்டுள்ளார்.


Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News