Kathir News
Begin typing your search above and press return to search.

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்... தமிழகத்தில் மே முதல் வாரத்தில் தொடங்குகிறது..!

கல்வியறிவு இல்லாதவர்களுக்கு மத்திய அரசின் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்... தமிழகத்தில் மே முதல் வாரத்தில் தொடங்குகிறது..!

SushmithaBy : Sushmitha

  |  26 April 2024 10:52 AM GMT

நாடு முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்டவர்களில் கல்வி கற்காதவர்களுக்கு தன்னார்வலர்களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவு பயிற்றுவிற்பதற்காக மத்திய அரசால் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 2022 ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் தமிழகத்தில் பள்ளி சாராத மற்றும் வயது வந்தோர் அனைவருக்கும் கல்வி இயக்குனரகத்தின் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு கல்வி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, இந்த ஆண்டில் பாரத எழுத்தறிவு திட்டத்தை செயல்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் தற்போது வெளியாகி உள்ளது. அதோடு 2024 - 2025 நடப்பாண்டில் தமிழகத்தில் எழுத படிக்க தெரியாத 15 வயதிற்கு மேலானவர்களை கண்டறியும் கணக்கெடுப்பு பணிகளை மே முதல் வாரத்தில் இருந்து மாவட்ட வாரியாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதோடு இதற்காக பள்ளி கல்லூரிகளில் என்சிசி அமைப்புகளையும், 100 நாள் வேலை திட்ட பணியாளர்களையும், மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களையும், தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரியர்கள் மூலமும் கணக்கெடுப்பு நடத்தலாம் என்று கூறப்படுகிறது.

Source : The Hindu Tamil thisai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News