மத்திய அமைச்சர் அமித்ஷா தொடர்பான போலி வீடியோ.. நிலவரம் என்ன..
By : Bharathi Latha
உள்துறை அமைச்சர் அமித்ஷா தொடர்பான போலி வீடியோவை வெளியிட்ட விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் பேசியது போன்று ஒரு போலி வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலானது. இடஒதுக்கீட்டுக்கு எதிராக உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியது போன்ற போலி வீடியோ வெளியாகி இருந்தது. ரித்தோம் சிங் என்பவரை அசாம் காவல்துறையினர் கைது செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என பேசியது போன்று போலி வீடியோவை சமூகவலைதளங்களில் பரவிய விவகாரம் தொடர்பாக டில்லி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு மே 1ல் ஆஜராகுமாறு டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பி உள்ளது. தெலுங்கானாவைச் சேர்ந்த 4 பேருக்கு நேரில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு நோட்டீஸ் அனுப்பப் பட்டுள்ளது.
குறிப்பாக பிரச்சார கூட்டத்தில் இட ஒதுக்கீடு தொடர்பாக அமித்ஷா அவர்கள் பேசிய வீடியோவை தவறாக சித்தரித்து பட்டியல் சமுதாயத்தினர் பழங்குடியினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கான இட ஒதுக்கிடை ரத்து செய்ய வேண்டும் என்ற சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியது. இது தற்போது போலி என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டு இருந்தது. இதற்காக சந்தேகப்படக்கூடிய நபரை தற்போது கைது செய்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy:News