Kathir News
Begin typing your search above and press return to search.

வருவாய் குறைந்து விட்டதாக தவறான தகவலை தரும் திராவிட மாடல் - ஆடிட்டர் ஜி. சேகர் குற்றச்சாட்டு!

வருவாய் குறைந்து விட்டதாக தவறான தகவலை தரும் திராவிட மாடல் - ஆடிட்டர் ஜி. சேகர் குற்றச்சாட்டு!

SushmithaBy : Sushmitha

  |  2 May 2024 2:03 PM GMT

தமிழகத்தின் வருவாய் ஜிஎஸ்டி வந்த பிறகு இரண்டு மடங்காகியுள்ளது ஆனால் திராவிட மாடல் அரசு வருவாய் குறைந்து விட்டதாக தவறான தகவலை தெரிவிக்கிறது என ஆடிட்டர் ஜி. சேகர் தெரிவித்துள்ளார்.

அதாவது, சரக்கு மற்றும் சேவை வரி அமலாகுவதற்கு முன்பு வாட் என்கின்ற மதிப்பு கூட்டு வருகிறது அதன்படி 2012 முதல் 2013 வரை தமிழகத்திற்கு மதிப்பு கூட்டு வரியாக 25 ஆயிரத்து 41 கோடி ரூபாய் வருவாய் கிடைத்தது, மேலும் மதிப்பு கூட்டு வரியாக 2013 முதல் 2014 வரை 25 ஆயிரத்து 875 கோடி ரூபாய்யும், 2014 முதல் 15 வரை 27,783 கோடி ரூபாயும் 2015 முதல் 16 வரை 29,786 கோடி ரூபாயும், கடைசியாக 2016 முதல் 17 வரை 31,304 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்துள்ளது.

2017 ஜூலையில் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது, அன்றிலிருந்து அடுத்த 9 மாதங்களில் ஜி எஸ் டி யின் மூலம் 24 ஆயிரத்து 907 கோடி ரூபாய் வருவாயாக கிடைத்தது. மேலும் 2018 முதல் 2019 வரை 41,767 கோடி ரூபாய்யும், 2019 முதல் 20 வரை 41,369 கோடி ரூபாயும், கொரோனா ஊரடங்கு காலமான 2020 முதல் 2021 37 ஆயிரத்து 910 கோடி ரூபாயும் கிடைத்தது.

ஆனால் ஊரடங்கு காலத்திற்குப் பிறகு 2021 முதல் 22 வரை ஜிஎஸ்டி மூலம் 48,916 கோடி ரூபாயும், 2022 முதல் 23 வரை 58,194 கோடி கிடைத்துள்ளது மேலும் இந்த வருவாய் ஆனது 2023 முதல் 24 வரை 63 கோடி தாண்டி விடும்! இப்படி ஜிஎஸ்டிக்கு முன்பு கிடைத்த வரி வருவாய் ஐ விட ஜிஎஸ்டியா தமிழகத்திற்கு கிடைக்கும் வரியானது இரட்டிப்பாகியுள்ளது. ஆனால் வருவாய் குறைந்து விட்டதாகவே திராவிட மாடர்ன் தவறான தகவலை தெரிவிக்கிறது என்று ஆடிட்டர் ஜி. சேகர் கூறியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News