போதைப்பொருள் பயன்பாடு.. தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்.. இந்து முன்னணி வேண்டுகோள்..
By : Bharathi Latha
நாளுக்கு நாள் தமிழகத்தில் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. குறிப்பாக இன்று இளைஞர்கள் போதைப் பொருட்கள் அடிமையாகி பல்வேறு தீய செயல்களுக்கு அடிக்கோடிட்டு வருகிறார்கள். பல்வேறு பகுதிகளில் தற்போது சுலபமாக போதைப் பொருள் கிடைப்பதாகவும் பல்வேறு தகவல்கள் மற்றும் செய்திகள் வெளிவந்த வண்ணம் இருக்கிறது. இது குறித்து இந்து முன்னணி தற்போது தமிழக இளைஞர்களை போதைப் பொருள் வசம் இடமிருந்து காக்க வேண்டும் என்று வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.
குறிப்பாக இது பற்றி அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிடும் பொழுது, "சிரமமின்றி போதைப் பொருள் வாங்க விற்க பிரத்யேகமாக இயங்கிய what's app குழு. வசமாக சிக்கிய போதைப் பொருள் பயன்பாட்டாளர் காதர் மொய்தீன். போதைப் பொருள் விற்னையாளர் சுல்தான். தமிழகம் போதை பொருள்களின் சர்வதேச சந்தையாக மாறி வருகிறதோ? தி.மு.கவின் அயலக அணி பொறுப்பாளராக இருந்த 2500 கோடி மதிப்புள்ள மெத்தப்பட்ட மைன் என்ற போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவன் ஜாபர் சாதிக் பிடிபட்டதிலிருந்து, தமிழகம் முழுவதும் மெத்தப்பட்டமைன் போதைப்பொருள் சிக்கிய வண்ணம் உள்ளது.
குறிப்பாக திராவிட மாடல் அரசு பொறுப்பேற்றதில் இருந்து, தமிழகம் போதை கடத்தல் கும்பலின் பிடியில் சிக்கி தமிழக இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். தமிழக அரசாங்கம் போர்க்கால அடிப்படையில் தமிழக காவல் துறையை முடுக்கி விட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலை கண்டறிந்து தமிழக இளைஞர்களை காப்பாற்ற வேண்டும்" என்று இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.
Input & Image courtesy: News