Kathir News
Begin typing your search above and press return to search.

இழிவு படுத்திவிட்டு ரகசியமாக தடுப்பூசி போட்டனர் : சமாஜ்வாதி மற்றும் காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி ...!

இழிவு படுத்திவிட்டு ரகசியமாக தடுப்பூசி போட்டனர் : சமாஜ்வாதி மற்றும் காங்கிரசை விளாசிய பிரதமர் மோடி ...!
X

SushmithaBy : Sushmitha

  |  5 May 2024 5:54 PM IST

உத்திர பிரதேச மாநிலம் இட்டாவா மாவட்டத்தில் நடைபெற்ற பாஜக தேர்தல் பேரணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றியுள்ளார். அப்போது, இன்று இங்கு பத்தாண்டு கால ஆட்சிக்குப் பிறகு உங்களிடம் ஆசி பெறுவதற்காக வந்திருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்வதை எனது நோக்கம் எனது கடின உழைப்பையும் கடந்த 10 ஆண்டுகளில் நீங்கள் பார்த்திருக்கிறீர்கள்.

காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சி தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக தேர்தலில் போட்டிருக்கிறது. ஆனால் நானும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மக்களுக்காக பாடுபடுகிறோம். மேலும் அவர்கள் நமது ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் குறித்து பொய்களை பரப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது எஸ்சி, எஸ்டி, ஓபிசி இட ஒதுக்கீட்டை முறியடித்து விட்டு மத அடிப்படையில் பகிர்ந்தளிக்க விரும்புகிறார்கள்! அதுமட்டுமின்றி ஒவ்வொரு உயிரையும் கொரோனா காலத்தில் காப்பாற்ற நாட்டின் விஞ்ஞானிகள் தடுப்பூசியை கண்டுபிடித்தார்கள் அவற்றை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ்ஸார் இழிவு படுத்தினார்கள், ஆனால் ரகசியமாக சென்று தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர் என பிரதமர் பேசியுள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News