நேபாளம் அரசு வெளியிட்ட சர்ச்சையான நோட்டு.. மத்திய அரசு கடும் எதிர்ப்பு..
By : Bharathi Latha
நேபாளம் அரசு தற்பொழுது தன்னுடைய புதிய வரைபடத்துடன் கூடிய ரூபாய் நோட்டுகளை வெளியிட்டு இருக்கிறது. இந்த ரூபாய் நோட்டுகளில் வெளியிடப்பட்ட படம் தான் தற்போது சர்வதேச அளவில் பெரும் சர்ச்சை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக இந்திய பகுதிகளை சேர்த்து நேபாளம் அரசாங்கம் வெளியிட்டு இருக்கும் புதிய ரூபாய் நோட்டுகளை சமூக வலைதளங்களில் தற்போது பேச்சு பொருளாகி இருக்கிறது. உத்தரகண்ட் மாநிலத்தின் லிபுலேக், லிமிபியதுரா மற்றும் கலபானி பகுதிகளை தனது பகுதியாக சேர்த்து புதிய வரைபடத்துடன் ரூபாய் நோட்டு வெளியிட நேபாளம் முடிவு செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
நம்முடைய இந்திய நாட்டின் அண்டை நாட்டினராக இருக்கும் நேபாளம் நம்முடைய நாட்டில் இருக்கும் பல்வேறு மாநிலங்களின் எல்லைகளை பகிர்ந்து கொள்கிறது. குறிப்பாக சிக்கிம், மேற்கு வங்காளம், பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் எல்லைகளை நேபாளமுடன் நாம் பகிர்ந்து கொண்டு இருக்கிறோம். இந்நிலையில் நேபாள அரசாங்கம் தற்போது தன்னுடைய ரூபாய் நோட்டுகளில் இந்தியா மாநிலத்தின் எல்லைப் பகுதிகளையும் சேர்த்து வெளியிட்டு இருப்பது தான் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்தரகண்ட்டின் லிபுலெக், காலாபானி மற்றும் லிமிபியதுரா ஆகிய பகுதிகளை உரிமை கொண்டாடி வருகிறது. இந்த ஒரு செயலுக்கு மத்திய அரசாங்கம் தன்னுடைய கடுமையான எதிர்ப்புகளை தற்போது தெரிவித்து இருக்கிறது. இதற்கு மத்திய அரசின் சார்பில் கூறும் பொழுது இது இரு நாடுகளுக்கு இடையே ஆக எடுக்கப்பட்ட ஒற்றுமையான முடிவு கிடையாது தன்னிச்சையாக எடுக்கப்பட்ட முடிவு இதற்கு நாங்கள் முழுமையான எதிர்ப்பை தெரிவிக்கிறோம் என்று கூறி இருக்கிறது. இந்நிலையில், இந்த பகுதிகளை கொண்ட வரைபடத்துடன் ரூ.100 நோட்டை அச்சடித்து வெளியிட அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. நேபாளத்தின் இந்த முடிவு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
Input & Image courtesy: News