Kathir News
Begin typing your search above and press return to search.

அறிவு, கல்வியின் மையமாக திகழும் இந்தியா.. வரலாற்றுச் சிறப்புமிக்க நிலை உணர்த்திய குடியரசு துணைத் தலைவர்..

அறிவு, கல்வியின் மையமாக திகழும் இந்தியா.. வரலாற்றுச் சிறப்புமிக்க நிலை உணர்த்திய குடியரசு துணைத் தலைவர்..

Bharathi LathaBy : Bharathi Latha

  |  7 May 2024 12:07 PM GMT

அறிவு, கல்வியின் மையமாக திகழும் இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க நிலையை குடியரசு துணைத்தலைவர் ஜக்தீப் தன்கர் எடுத்துரைத்தார். தில்லி பல்கலைக்கழகத்தின் திறந்தவெளி கற்றல் பள்ளியின் 62-வது நிறுவன தினக் கொண்டாட்டத்தில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய குடியரசுத் துணைத் தலைவர், நாடு தனது கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதில் உறுதியாக உள்ளது என்று உறுதிபடக் கூறினார். நாளந்தா, தட்சீலா போன்ற கல்வி நிறுவனங்களின் புகழ்பெற்ற பாரம்பரியம் பற்றி குறிப்பிட்ட அவர், சமகாலத்தில் இந்தியாவின் கல்வி நிலப்பரப்பில் ஏற்பட்டுள்ள முன்னுதாரண மாற்றம் மற்றும் மறுமலர்ச்சி ஆகியவற்றை எடுத்துரைத்தார்.


பணிபுரியும் தொழில் வல்லுநர்கள், இல்லத்தரசிகள் மற்றும் மாணவர்கள் உட்பட வாழ்க்கையின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த பல்வேறு தரப்பு கற்போருக்கு மாற்றத்தை ஏற்படுத்தும் தளத்தை வழங்கியதற்காக திறந்த வெளிப் பள்ளி நிறுவனத்தைப் பாராட்டினார். கடந்த கால சூழ்நிலைகளால் கற்பதற்கான வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு திறந்த வெளிப் பள்ளி நிறுவனம் மீண்டும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்துள்ளது. இது அவர்களுக்கு இடையூறு இல்லாமல் கல்வியைத் தொடர உதவுகிறது என்று குறிப்பிட்டார். முன்னதாக முறையான கல்வியைத் தவறவிட்டவர்களுக்கு 2-வது வாய்ப்பை வழங்கியதற்காகவும், விளிம்புநிலை சமூகங்களுக்கு அறிவு மற்றும் திறன்கள் மூலம் அதிகாரம் அளித்ததற்காகவும், அதன் மூலம் உண்மையான உள்ளடக்கிய சூழலை வளர்த்ததற்காகவும் திறந்த வெளிப் பள்ளி நிறுவனத்தைப் பாராட்டுவதாக அவர் குறிப்பிட்டார்.


கல்வி நிறுவனங்களின் அமைப்பு மற்றும் தரத்தை வடிவமைப்பதில் உள்கட்டமைப்பை விட ஆசிரியர்களின் முக்கிய பங்கை தன்கர் மேலும் வலியுறுத்தினார். "கல்வி என்பது மிகப்பெரிய உரிமை மற்றும் நன்கொடை என்று கூறிய அவர், கல்வியை விட பெரிய அடிப்படை உரிமை எதுவும் இருக்க முடியாது என்றும், கல்வியை விட எந்த நன்கொடையும் பெரியதாக இருக்க முடியாது" என்றும் அவர் மேலும் கூறினார்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News