Kathir News
Begin typing your search above and press return to search.

காங்கிரஸ் கூட்டணியை முறித்து தமிழர்களின் மானத்தை காப்பாரா முதல்வர்? - பிரதமர் கேள்வி!

காங்கிரஸ் கூட்டணியை முறித்து  தமிழர்களின் மானத்தை காப்பாரா முதல்வர்? - பிரதமர் கேள்வி!
X

SushmithaBy : Sushmitha

  |  8 May 2024 6:36 PM IST

அண்மையில் இந்தியாவின் வாரிசுரிமை தொடர்பாக புதிய சர்ச்சை கிளப்பினார் இந்தியன் ஓவர்சீஸ் காங்கிரஸ் தலைவர் ஷாம் பிட்ரோடா. அது பெரும் விவாத பொருளாக மாறியது. இந்த நிலையில் தற்போது இந்தியாவில் கிழக்கில் உள்ளவர்கள் சீனர்கள் போலவும் தென்னிந்தியர்கள் ஆப்பிரிக்கர்கள் போலவும் இருப்பதாக அவர் பேசியுள்ளார், இதுவும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

எதற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியா ஆக்கிரமிப்பாளர்களின் நாடு என்றும் தனக்கென்று தனித்துவம் இல்லை என்றும் காங்கிரஸ் கட்சி நம்புகிறது. துரதிர்ஷ்டவசமாக, இது அதன் தலைவர்கள், அவர்களின் சந்ததியினர் மற்றும் வழிகாட்டிகளின் சிந்தனை செயல்முறையாகும் என பதிவிட்டதோடு, அவரது புகைப்படத்தையும் பதிவிட்டு அதற்கு சாம் பிட்ரோடா அவர்களே இதோ பாருங்கள் கருப்பு நிறத்தில் பாரதத்தைச் சேர்ந்த ஒருவன் எனவும் குறிப்பிட்டு பிட்ரோடவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும், பிரதமர் நரேந்திர மோடி தமிழக கலாச்சாரம் பற்றி பேசுகின்ற முதல்வர் ஸ்டாலின் இத்தகைய பெரிய குற்றச்சாட்டிற்கு பிறகு தமிழரின் சுயமரியாதைக்காக காங்கிரஸ் கூட்டணியை உரித்து கொள்ள முன்வருவாரா என்றும் பிரதமர் கேள்வி எழுப்பி உள்ளார்!

Source : Asianet news Tamil & Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News