Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியாவிற்கு கிடைத்த நல்ல சான்ஸ்.. மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் ஒப்பந்தம்..

இந்தியாவிற்கு கிடைத்த நல்ல சான்ஸ்.. மேக் இன் இந்தியா திட்டத்தை மேம்படுத்தும் ஒப்பந்தம்..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  8 May 2024 4:39 PM GMT

கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்த தனியார் துறையுடன் இந்திய கடலோரக் காவல்படை புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. கப்பல் கட்டுதலில் உள்நாட்டு தரத்தை மேம்படுத்துவதற்காக உள்நாட்டு கடல் தர எஃகு தயாரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையும், ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனமும் 2024 மே 07 நேற்று கையெழுத்திட்டன. இந்தக் கூட்டாண்மை மூலம், இரு தரப்பும் உள்நாட்டுமயமாக்கலை வளர்ப்பதற்கும், நாட்டின் நலனுக்காக இந்த பொருட்களை உற்பத்தி செய்து பயன்படுத்துவதற்குமான திறன்களை மேம்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளன.


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் சிக்கலான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்வதில் பொது-தனியார் கூட்டாண்மையின் முக்கியத்துவத்தை குறிப்பிடுவதுடன், அரசு முகமைகளுக்கும் தனியார் துறைக்கும் இடையே ஒத்துழைப்பின் அவசியத்தை வலியுறுத்துகிறது. மேலும் இந்திய கடலோரக் காவல் படைக்கு கடல்-தர எஃகு பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கான உத்தரவாதத்தை கப்பல் கட்டும் தளங்களுக்கு இந்த ஒப்பந்தம் அளிக்கிறது.


இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய கடலோரக் காவல்படையின் துணை தலைமை இயக்குநர் எச்.கே.சர்மா, ஜே.எஸ்.பி நிறுவனத்தின் சந்தைப்பிரிவு தலைமை அதிகாரி எஸ்.கே பிரதான் ஆகியோர் இந்திய கடலோரக் காவல்படையின் உயர் அதிகாரிகள் முன்னிலையில் கையெழுத்திட்டனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News