Kathir News
Begin typing your search above and press return to search.

ஒடிசாவில் பிரதமர் ரோட் ஷோ...இரவிலும் ஆர்ப்பரித்த மக்கள்..

ஒடிசாவில் பிரதமர் ரோட் ஷோ...இரவிலும் ஆர்ப்பரித்த மக்கள்..
X

SushmithaBy : Sushmitha

  |  10 May 2024 11:04 PM IST

ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகின்ற லோக்சபா தேர்தல் தற்போது மூன்று கட்டங்கள் நிறைவடைந்துள்ளது. இன்னும் நான்கு கட்ட தேர்தல் கள் அடுத்தடுத்ததாக நடைபெற உள்ளதால் நாடு முழுவதும் தேர்தல் பரபரப்பு நிலவி வருகிறது மேலும் ஒவ்வொரு கட்சியில் உள்ள ஸ்டார் பேச்சாளர்கள் பல இடங்களுக்கு சென்று தங்களது பிரச்சாரத்தை நடத்தி வருகிறார்கள்.


அந்த வகையில் பிரதமர் நரேந்திர மோடி பல இடங்களுக்கு சென்று தனது பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்று ஒடிசாவிற்கு வந்த பிரதமர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் மக்கள் தரிசன யாத்திரையை மேற்கொண்டார்.


அதாவது ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகம் உள்ள பகுதியான ராமந்திரி வாணிவிகாரி வரை இரண்டு புள்ளி ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு ரோஸ் ஷோவை நடத்தினார். பிரதமரை கார்டக் கூடியிருந்த மக்கள் அனைவரும் சாலையின் இரண்டு புறமும் திரண்டு ஆரவாரமாக பிரதமரை வரவேற்றனர்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News