Kathir News
Begin typing your search above and press return to search.

நாய் வளர்க்கும் உரிமையாளர்கள் இனி இதை செய்ய வேண்டும்.. மாநகராட்சி உத்தரவு..

நாய் வளர்க்கும் உரிமையாளர்கள் இனி இதை செய்ய வேண்டும்.. மாநகராட்சி உத்தரவு..
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  13 May 2024 8:35 PM IST

தமிழகத்தில் தொடர்ச்சியாக பொதுமக்களை நாய் கடிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. குறிப்பாக பொதுமக்கள் வாக்கிங் செல்லும் போதும் அல்லது பூங்காக்களின் செல்லும்பொழுது நாய்கள் பெரும்பாலான இடங்களில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 23 இனங்களை சேர்ந்த நாய்களை வளர்க்க அரசு தடை விதித்து இருக்கிறது. மேலும் உரிமம் பெறாமல் நாய்களை வளர்த்தால் உரிமையாளருக்கு ரூபாய் ஆயிரம் அபராதம் வசூலிக்க தமிழக அரசு அறிவுரை வழங்கி இருக்கிறது.


சமீபத்தில் தமிழகத்தில் நடந்த ஒரு சம்பவம் காரணமாக இத்தகைய நடவடிக்கையை தமிழக அரசு கையில் எடுத்து இருக்கிறது. சென்னை மாநகராட்சி பூங்காவில், 5 வயது சிறுமியை 2 ராட் வீலர் இன நாய்கள் கடித்து குதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பூங்கா பகுதியில் வாக்கிங் சென்ற ஒரு தம்பதியினரையும் நாய் கடித்ததாக சம்பவம் பதிவாகி இருக்கிறது. இதன் காரணமாக அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.


தொடர்ச்சியான பெருநகரங்களில் இத்தகைய நாய் கடிக்கு சமயங்கள் தொடர்ச்சியாக அரங்கேறி வருவது அரசை கேள்விக்கு உள்ளாக்கி உள்ளது. இதன் காரணமாக உயர் மட்டத்தில் இருந்து இது குறித்து ஆலோசனை எடுக்கப்பட்டு இருக்கிறது. தமிழக அரசு அதிரடியாக இதனை நடவடிக்கை எடுத்துள்ளது. கால்நடை வல்லுனர்கள் பரிந்துரைப் படி, 23 வகையான வெளிநாட்டு கலப்பு மற்றும் கலப்பற்ற நாய் இனங்கள், மிகவும் ஆக்ரோஷமானவை மற்றும் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் இனங்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளன. இதனால் இவற்றுக்கு தமிழகத்தில் தற்போது தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.

Input & Image courtesy:News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News