கோவிலை இடிக்க தயாராகும் நகராட்சி.. இந்து முன்னணியினர், பொதுமக்கள் இரவு, பகலாக போராட்டம்..
By : Bharathi Latha
சத்தியமங்கலம் பகுதியில் அமைந்திருக்கும் இந்து கோவிலை மாநகராட்சி நிர்வாகம் தனக்கு சொந்தமான இடத்தில் கட்டி இருப்பதாக கூறி, அவற்றை அகற்ற முற்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்து முன்னணி தன்னுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்து தெரிவிக்கும் பொழுது, "ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆற்றங்கரையில் சுமார் 75 ஆண்டுகளுக்கு மேல் பழமையான வேப்பமரம் ஒன்று உள்ளது. 10 ஆண்டுகளுக்கு முன்பாக இந்த வேப்ப மரத்தில் திடீரென்று பால் வடியத் தொடங்கிய அதிசயம் நடந்தது. அதன் பின்னர் இந்து முன்னணி மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து அங்கே அம்மன் விக்கிரகத்தை நிறுவி சின்ன பண்ணாரி அம்மன் என்று வணங்கி வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பாக சத்தியமங்கலம் நகராட்சியை சேர்ந்த அதிகாரிகள் இந்த ஆலயம் ஆனது, நகராட்சி இடத்தில் இருப்பதாக கூறி அந்த ஆலயத்தை அகற்றுவதற்காக ஜேசிபி வாகனத்துடன் அங்கு சென்றனர். இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நகராட்சி ஊழியர்கள் திரும்பிச் சென்றனர்.
கடந்த இரண்டு நாட்களாக இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இந்த ஆலயத்தை காத்திட இரவு பகலாக ஆலயத்திலேயே தங்கி இருந்து வருகின்றனர். சத்தியமங்கலம் நகராட்சி நிர்வாகம் இதற்கு பின்னரும் அந்த ஆலயத்தை அகற்ற முயற்சி செய்தால் அந்தப் பகுதியில் மிகப்பெரிய அறப்போராட்டம் வெடிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது" என்று கூறி உள்ளனர்.
Input & Image courtesy: News