Kathir News
Begin typing your search above and press return to search.

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா தமிழக அரசு? - அண்ணாமலை கேள்வி?

திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் நிறுவனங்களுக்கு மட்டுமே செயல்படுகிறதா தமிழக அரசு? - அண்ணாமலை கேள்வி?

SushmithaBy : Sushmitha

  |  14 May 2024 1:54 PM GMT

சமீபத்தில் பத்திர பதிவு கட்டணத்தை தமிழக அரசு உயர்த்தியதை கண்டித்து தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஆட்சிக்கு வந்ததில் இருந்து கடந்த மூன்று ஆண்டுகளில் மாதம் ஒரு முறை, தமிழக மக்களின் மீது ஏதோ ஒரு வகையில் கட்டண உயர்வைச் சுமத்தி வரும் திமுக அரசு, தற்போது பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தி அதிர்ச்சி அளித்திருக்கிறது. மே 8, 2024 தேதியிட்ட அரசாணையின்படி, ரூ.5/- ஆக இருந்த கட்டணம், ரூ. 500/- ஆகவும், ரூ.30 ஆக இருந்த கட்டணம், ரூ.1,000/- ஆகவும் என, 26 வகையான சேவைகளுக்கான பத்திரப் பதிவு கட்டண உயர்வைச் சற்றும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்குப் பல மடங்கு உயர்த்தியிருக்கிறது திமுக அரசு.

ஏற்கனவே, கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல், வழிகாட்டி மதிப்பை சுமார் 50% வரை உயர்த்தி வசூலிக்கத் தொடங்கிய திமுக அரசின் செயல்பாடு சட்ட விரோதமானது என்று, மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னரும், தீர்ப்பை மதிக்காமல், உயர் நீதிமன்றத்தை அவமதிக்கும் விதமாகத் தொடர்ந்து, உயர்த்தப்பட்ட கட்டணத்தையே வசூலித்து வந்தது. தற்போது, பத்திரப்பதிவு கட்டணத்தையும் பல மடங்கு உயர்த்தியிருப்பதன் மூலம், சாதாரண பொதுமக்கள் மீதான கட்டணச் சுமையை பல மடங்கு அதிகமாக்கியுள்ளது.

தற்போது, வழிகாட்டி மதிப்பை மீண்டும் உயர்த்த, திமுக அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இதன்படி, சில இடங்களில் 33% வழிகாட்டி மதிப்பு உயர்வும், சில இடங்களில் 50% உயர்வும், மேலும் சில இடங்களில் 100% வரை வழிகாட்டி மதிப்பை உயர்த்த, திமுக அரசு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. இத்தனை அதிகமான கட்டணச் சுமையை பொதுமக்கள் மீது திணிப்பதன் பின்னணி, திமுகவுக்கு வேண்டப்பட்ட ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமான நிறுவனங்களின் வளர்ச்சிக்கும் வருமானத்துக்குமானதாகத் தெரிகிறதே அன்றி, பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து திமுகவுக்கு எந்த அக்கறையும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது என்று தெரிவித்துள்ளார்.

Source : Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News