யானை வழித்தடம் என்ற பெயரில் வனம் அபகரிப்பா? - மத்திய அமைச்சர் முருகன் திமுக அரசுக்கு கண்டனம்!

By : Sushmitha
மத்திய இணை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், யானைகள் மற்றும் மனிதர்கள் இடையிலான மோதல்களைத் தவிர்க்கவும், யானைகளைப் பாதுகாக்கவும் வனத்துறை சார்பாக தமிழகம் முழுவதும் 42 யானை வழித்தடங்கள் அடையாளம் காணப்பட்டு, அது தொடர்பான 161 பக்க அறிக்கையை தமிழக அரசு வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 20 யானை வழித்தடங்களை மத்திய அரசு கண்டறிந்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட குழு, 42 வழித்தடங்களை கண்டறிந்துள்ளதாக கூறுகிறது.
அடையாளம் காணப்பட்டுள்ள இந்த யானை வழித்தடங்களில் தனியார் விடுதிகள், நெடுஞ்சாலைகள், தேயிலைத் தோட்டங்கள், விவசாய நிலங்கள் மட்டுமல்லாது மக்கள் வசிக்கும் பகுதிகளும் உள்ளன. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் பகுதியைச் சேர்ந்த, 46 கிராமங்கள் இதில் உள்ளன. அப்பகுதிவாழ் மக்கள் வனத்துறையின் இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ள பரிந்துரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
யானைகள் வழித்தடத்தை காக்க வேண்டும் என்ற கடமை எல்லோருக்கும் உள்ளது. அதை மக்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. அதேசமயம் மக்களின் சந்தேகங்களை தீர்க்காமல் அப்பாவி மக்களின் நிலத்தை அபகரிக்கும் திட்டத்தை திமுக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.
தமிழ், தமிழ் என்று சொல்லிக்கொண்டு, ஆங்கிலத்தில் அறிக்கை வெளியிட்டு, பொதுமக்களின் கருத்துகளைக் கேட்பதாக இவர்கள் கூறுவது வேடிக்கையான ஒன்று.
அதேபோல் மக்களிடம் கருத்து கேட்பதை ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ள இருப்பதாக தெரிகிறது. அதற்கு பதிலாக கடை கோடி மக்களிடமும் நேரடியாக சென்று கருத்து கேட்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
Source : Dinamalar
