காணாமல் போகும் கோவில் குளங்களை மீட்குமா அரசு.. இந்து முன்னணியின் கோரிக்கை..
By : Bharathi Latha
தற்போது இருக்கும் காலகட்டங்களில் கோவில்களுக்கு அருகில் இருக்கும் குளங்கள் நாளடைவில் இல்லாமல் ஆகி விடுவதாக இந்து முன்னணி தற்போது குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்கள். குறிப்பாக இத்தகைய குளங்கள் இருக்கும் பகுதிகளை ஆக்கிரமித்து அவற்றைகள் அவற்றை வேண்டும் என்று மார்க்கெட் கட்டுவதாக கூறி ஆக்கிரமிக்கிறார்கள். இதற்கு தற்போது உள்ள தமிழக அரசும் சம்மதிப்பதாக இந்து முன்னணியினர் குற்றச்சாட்டை வைத்து இருக்கிறார்கள். இது பற்றி அவர்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் கருத்துக்களை பகிர்ந்து இருக்கிறார்கள்.
இது பற்றி அவர்கள் கூறும் பொழுது, "கோவில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் எனக்கூறி, ஊருக்கு ஒரு கோவில், கோவில் தோறும் தெப்ப குளங்களை அமைத்து நீர் மேலாண்மையை பாதுகாத்து உலகிற்கே முன்னுதாரணமாக திகழ்ந்தது இந்துக்களின் கலாச்சாரம். இத்தகைய பெருமை வாய்ந்த இந்து கலாச்சாரம், பண்பாடு திராவிட ஆட்சியில் சிதைந்து போய்க் கொண்டிருக்கிறது. திருப்பூர் வீரராகவ பெருமாள் கோவில் குளத்தை ஆக்கிரமித்து மார்க்கெட் கட்டியதை போல பல ஊர்களில் கோவில் தெப்பக்குளங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி தெப்பகுளங்களே இல்லாமல் ஆக்கிவிட்டனர். இருக்கும் தெப்பக்குளங்களும் முறையான பராமரிப்பின்றி சாக்கடையாகவும், வறண்டு போய் கிரிக்கெட் மைதானங்களாகவும் மாறிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தெப்பக்குளங்களை துாய்மையாக பராமரிப்பதற்கான நடைமுறைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு, அறநிலைய துறைக்கு தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது கண்டு பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காலங்கடந்த செயல் தான் என்றாலும் இனியேனும் இருக்கும் குளங்களை காப்பாற்றி, காணமல் போன குளங்களை கண்டுபிடித்து வருங்கால சந்ததியினர் வளமுடன் வாழ வழிவகை செய்யுமா? இந்து விரோத பாசிஸ திமுக அரசு" என்ற பெரிய கேள்வியையும் முன்வைத்து இருக்கிறார்கள்.
Input & Image courtesy: News