போதைப்பொருள் பயன்பாட்டிற்கு எதிராக உடனடி தீர்வு காண வேண்டும்.. இந்து முன்னணி கோரிக்கை..
By : Bharathi Latha
தமிழகத்தில் தற்போது பெரும்பாலான இடங்களில் போதைப்பொருள் அதிக அளவில் கிடைப்பதாக செய்திகள் தினம், தினம் வெளிவந்து கொண்டு இருக்கிறது. குறிப்பாக இளைஞர்கள் இதற்கு மிகவும் அடிமையாக இருப்பதாகவும் பல்வேறு தகவல்கள் நமக்கு கிடைக்க தான் செய்கின்றது. இந்த ஒரு விஷயத்தை கருத்தில் கொண்டு இந்து முன்னணி அமைப்பினர் போதைப்பொருள் நடவடிக்கை தடுக்க போர்க்கால அடிப்படையில் திமுக செயல் பட வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்றே வைத்து இருக்கிறார்கள்.
இது பற்றி அவர்கள் சமூக வலைதள பக்கங்களில் குறிப்பிடும் பொழுது, "தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் போதையை ஒழிக்க வேண்டும். இல்லையென்றால் மக்கள் போராட்டம் மூலம் திராவிட மாடல் அரசுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் அதுவே தீர்வாக அமையும். சமீபத்தில் போதைக்காக பல பொருட்களை பயன்படுத்தி இளைஞர்கள் இறந்து விடுகின்றனர். சேலம் அரசு மருத்துவமனையில் போதைக்காக சொல்யூஷன் பயன்படுத்திய ஒரு பள்ளி மாணவன் இன்று பலியாகியுள்ளார்.
பல மேல் தட்டு மக்கள் பயன்படுத்திய போதையை இன்று அனைத்து தரப்பு இளைஞர்களும் மாணவர்களும் பயன்படுத்தும் அளவிற்கு மோசமான அழிவை நோக்கி தமிழகம் செல்வது கண்கூட தெரிகிறது. உடனடியாக தமிழக அரசு மாணவர்களுக்கு விழிப்புணர்வை கொண்டு வர வேண்டும்" என்று கூறி உள்ளனர்.
Input & Image courtesy: News