சுவிட்சர்லாந்து மற்றும் ஜெர்மனியின் ரயில் நெட்வொர்க்கை மிஞ்சிய இந்திய ரயில் நெட்வொர்க் - அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பெருமிதம்...!
By : Sushmitha
மும்பையில் வளர்ந்த இந்தியா தூதர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் ரயில்வே மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி கலந்து கொண்டு பேசியுள்ளார். அதில், இந்திய ரயில்வேயில் கடந்த 10 ஆண்டுகளில் மோடி அரசு மிகப் பெரிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பு ஆட்சியில் இருந்த அரசு ரயில்வே துறையை பால் கறக்கும் பசுவாக மட்டுமே கண்டது ஆனால் பிரதமர் மோடி ரயில்வே முழு வளர்ச்சியை பெற்றுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டுமே 5,300 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது, இது சுவிட்சர்லாந்தின் ஒட்டுமொத்த ரயில் நெட்வொர்க்கிற்கு இணையானது என்றும், கடந்த 10 ஆண்டுகளில் 31 ஆயிரம் கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது அது ஜெர்மனியின் ஒட்டுமொத்த ரயில் நெட்வொர்க்கிற்கு நிகரானது என்றும் கூறியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் 44,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடந்த 10 ஆண்டுகளில் ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டனது எனவும் நாடு முழுவதும் 300 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட்ட வருகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.
Source : The Hindu Tamil thisai