வித்துவான்கள் சூழ்ந்த குழிக்குள் வசிக்கும் முதல்வருக்கு பிரதமர் என்ன கூறினார் என தெரியுமா? விளக்கத்துடன் பதிலடி கொடுத்த அண்ணாமலை!!

By : Sushmitha
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிரதமர் குறித்து சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள கருத்திற்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.
தமிழகத்திற்குள்ளும், வெளியிலும் நடக்கும் சம்பவங்கள் குறித்து எதுவுமே அறியாமல், நிலைய வித்வான்கள் சூழ்ந்த குழிக்குள்ளே வசிக்கும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள், நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஒடிசாவில் பிரச்சாரத்தின் போது பேசியதன் பின்னணியைப் புரிந்து கொள்ளாமல் பேசுவது துரதிர்ஷ்டவசமானது.
மக்களை இனம், மதம், மொழி மற்றும் சாதியின் பெயரால் பிளவுபடுத்துவதில், திமுக நிபுணத்துவம் வாய்ந்தது என்பதையும், அந்தப் பிரிவினையை ஒதுக்கி வைப்பதில் பாஜக உறுதியாக இருக்கிறது என்பதையும், முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு நினைவூட்ட விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், தமிழக பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியும், தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்தும், தனது ' மோடி வெறுப்பாளர்' முகமூடியை கலைக்க மறுக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்! ஒடிசாவில் உள்ள புரி ஜெகந்நாதர் கோயிலின் சொத்துக்களின் சாவியை திருடியவர்களை விமர்சித்தால், இவர் ஏன் தமிழர்கள் மீது பழி சுமத்தியதாக நாடகமாடுகிறார்?
வட இந்தியர்களை காழ்ப்புணர்வுடன் தூற்றுவதும், மாநிலங்களுக்கிடையே குரோதத்தைத் தூண்டுவதும் திமுகவுக்கு தான் கை வந்த கலை! ஆனால், பிரதமரை தரம் தாழ்ந்து விமர்சிப்பது முதல்வருக்கு அழகா?
அரசியலுக்காக, தான் வகிக்கும் பொறுப்பின் கண்ணியத்தை மறந்து, நாளுக்கு நாள் இவ்வளவு தரக்குறைவாக நடந்துகொள்வதை மாண்புமிகு முதல்வர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
Source : Asianet news Tamil
