அனைத்தையும் ஆர்எஸ்எஸ் அமைப்பிலே கற்றுக் கொண்டேன் - நீதிபதி சித்தரஞ்சன் தாஷ் பெருமிதம்!

By : Sushmitha
நேற்று கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சித்தரஞ்சன் தாஷ் ஓய்வு பெற்ற நிலையில் அவருக்கு பிரிவுபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அந்த விழாவில் பேசிய அவர் தான் ஒரு ஆர்எஸ்எஸ் உறுப்பினர் என்றும் அந்த அமைப்பின் மூலமே பலவற்றைக் கற்றுக் கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு நான் அதிக கடன் பட்டிருக்கிறேன் ஏனென்றால் என் குழந்தை பருவத்தில் இருந்து எனது இளமை காலம் முழுவதுமே நான் அதில் இருந்தேன் தைரியமாகவும், நேர்மையாகவும், மற்றவர்களுக்கு சமமான பார்வையை கொண்டிருக்கவும், தேசபக்தி மற்றும் வேலைக்கான அர்ப்பணிப்பு உணர்வையும் அங்கு தான் கற்றுக்கொண்டேன்.
இருப்பினும் எனது தொழில் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றத்திற்காகவும் எனது உறுப்பினர் பதவியை ஒருபோதும் நான் பயன்படுத்தவில்லை ஏனென்றால் அது ஆர்எஸ்எஸ் கொள்கைகளுக்கு எதிரானது. நீதிபதியாக என் முன் அனைவரும் சமம்! என் வாழ்க்கையில் நான் எந்த தவறும் செய்யாததால் நான் ஆர் எஸ் எஸ் அமைப்பை சேர்ந்தவர் என்று சொல்லிக் கொள்வதில் தைரியம் இருக்கிறது ஏனென்றால் அதுவும் தவறு கிடையாது என்று பேசினார்.
மேலும், ஆர் எஸ் எஸ் அமைப்பு என்னை அழைத்தால் மீண்டும் அங்கு பணியாற்றுவேன் என்றும் அவர் கூறியுள்ளார்.
Source : The Hindu Tamil thisai
