அன்றும் இன்றும் என்றும் மாறாத காங்கிரஸ் - அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, "நான் பிறந்ததிலிருந்து தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு எதிராக உருவாக்கப்பட்ட ஒரு சிஸ்டம் இருக்கிறது. எனது பாட்டி பிரதமராக இருந்தபோதும் எனக்கு இந்த சிஸ்டம் பற்றி தெரியும், நீதித்துறை கல்வித்துறை ராணுவம் என அனைத்திலும் 90 சதவீத வேரின் பங்களிப்பை இல்லை" என அவர் பேசியுள்ள வீடியோவை தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பகிர்ந்த அண்ணாமலை, ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது, பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமுதாய மக்கள் மற்றும் ஆதிவாசிகளுக்கு எதிராக தனது பாட்டியின் ஆட்சிக் காலத்தில், தனது தந்தையின் ஆட்சி காலத்தில் மற்றும் திரு மன்மோகன் சிங் அவர்களின் ஆட்சிக் காலத்தில் சிஸ்டம் இருந்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கும் ராகுல் காந்தி அவர்கள்.
அன்றும், இன்றும், என்றும் காங்கிரஸ் மாறப்போவது கிடையாது! என்று பதிவிட்டுள்ளார்.
Source : Dinamalar