ஒரு தீவிர இந்துத்துவா தலைவர் ஜெயலலிதா... சந்தேகம் இருந்தால் விவாதிக்க தயார் - சவால் விட்ட அண்ணாமலை!
By : Sushmitha
சென்னையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த அண்ணாமலை, தேர்தல் குறித்த கலந்துரையாடல் பாஜக நிர்வாகிகளுடன் நடந்ததாகவும் ஜூன் நான்காம் தேதி மூன்றாவது முறையாக பிரதமர் மோடி ஆட்சி அமைக்கும் போது தமிழகத்திலிருந்து பாஜக எம்.பி.,கள் செல்வார்கள் என்பதில் நாங்கள் மிகுந்த நம்பிக்கையோடு இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, நடிகர் பிரகாஷ்ராஜ் பெங்களூரு மத்திய தொகுதியில் டெபாசிட் இழந்தவர். ஒரு நடிகராக அவருக்கு மரியாதை உண்டு. ஆனால் அரசியலில் அவரின் குரலுக்கு மரியாதை அளிக்க விரும்பவில்லை, மோடியை திட்டுவதையே தனது முழு நேர வேலையாக கொண்டுள்ளார் என்றும், திருமாவளவன் குறித்த கேள்விக்கு ஒரு எம்.பி., என்பதால் திருமாவளவன் பொறுப்பாக பேச வேண்டும். நாங்கள் ஆட்சியில் இருக்கும் வரை மாற்றுக் கட்சியினருக்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது. திமுக கூட்டணியில் உள்ள திருமாவளவன் கருத்துரிமை பேசுவது தான் வேடிக்கையாக உள்ளது என்றும் பேசினார்.
அதுமட்டுமின்றி, ஜெயலலிதா ஒரு தீவிரமான இந்துத்துவாவாதி. இதில் அதிமுகவினர் யாரேனுக்கும் சந்தேகம் ஏற்பட்டால் 1995 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இந்துத்துவா பற்றி வழங்கிய தீர்ப்பில் இந்துத்துவா என்ன என்பது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்துத்துவா என்பது மதம் கிடையாது, வாழ்க்கை முறை மற்றும் அனைவரையும் அரவணைப்பது! மேலும் கரசேவை என்பது தவறான வார்த்தை கிடையாது என்று ஜெயலலிதா அதற்கு ஆதரவாக பேசியுள்ளார். கரசேவையை காரணம் காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்டதை கடுமையாகவும் ஜெயலலிதா எதிர்த்தார் என்று கூறியுள்ளார்.
அதோடு ஜெயலலிதாவின் கொள்கைகளில் இருந்து அதிமுக தற்போது விலகி செல்கிறது. நான் கூறுவதை அதிமுக எதிர்த்தால் அவர்களின் விவாதத்திற்கு பாஜக தயாராக உள்ளது என்றும் சவால் விடுத்துள்ளார் அண்ணாமலை.
Source : The Hindu Tamil thisai