Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக திமுக அரசுக்கு எதிராகவும்,கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கும் விவசாயிகள்!

தமிழக திமுக அரசுக்கு எதிராகவும்,கேரளா கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகவும் போர்க்கொடி தூக்கும் விவசாயிகள்!

SushmithaBy : Sushmitha

  |  30 May 2024 1:20 PM GMT

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

தமிழகம் மற்றும் கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை தொடர்பான பிரச்சனை நீண்ட காலமாக நீடித்து வருகிறது. முதலில் முல்லைப் பெரியாறு அணை பலவீனம் அடைந்து விட்டதாகவும், இயற்கை சீற்றங்களால் அணை உடைந்தால் அணை சுற்றுவட்டாரத்தில் உள்ள மக்கள் பாதிப்படைவார்கள் எனவும் கேரளா அரசு கோரிக்கை முன்வைத்து, உடனடியாக முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக ஒரு புதிய அணை கட்ட வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இது தொடர்பான வழக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணை தொடர்பான விவகாரத்தை மத்திய அரசு, தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களும் தனித்தனியாக புதிய சிறப்பு குழு ஒன்றை அமைத்து அதில் இரு மாநிலங்களும் மத்திய குழு உடன் ஒன்றிணைந்து அணை பேரிடர் மேலாண்மை திட்டத்தில் செயல்பட வேண்டும். இயற்கை பேரிடர் காலத்தில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த சிறப்புக் குழு துரிதமாக மேற்கொள்ள வேண்டும். அணை முழு பாதுகாப்போடு இருப்பதால் முல்லைப் பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்ட வேண்டிய அவசியம் இல்லை என்றும் கூறியது.

புதிய அணை கட்ட துடிக்கும் கேரள மார்க்சிஸ்ட் அரசு:

ஆனால் இதையும் மீறி முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய ஆணை கட்ட கேரள அரசு முனைப்பு காட்டி வருகிறது. மேலும் அந்தக் கோரிக்கையை மத்திய அரசு பரிசளிக்க வேண்டும் என்றும் விண்ணப்பித்துள்ளது. இதனை அடுத்து முல்லைப் பெரியாறு பகுதியில் புதிய ஆணை கட்டுவது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டு குழு தலைவர் சக்கரபாணி தலைமையில் நடைபெற இருந்த பரிசீலனை கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி தமிழ்நாடு மற்றும் கேரளா ஆகிய இரு மாநில அரசுகளும் ஒரு சுமூக உடன்படிக்கையோடு இருந்தால் மட்டுமே புதிய அணை குறித்து விவாதிக்கப்படும் குறிப்பாக தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமல் இந்த விவகாரத்தில் கேரளா அரசு தன்னிச்சையாக எந்த முடிவையும் மேற்கொள்ள இயலாது என மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழு திட்டவட்டமாக கூறியுள்ளது.

மௌனம் கலைக்காத தமிழக முதல்வர்:

ஆகவே, இதனை பயன்படுத்தியே தமிழக அரசு கேரளா அரசிடம் தொடர்ச்சியான விண்ணப்பங்களை முன்வைத்து கேரளா அரசின் முல்லைப் பெரியாறு பகுதியில் அணை கட்டும் திட்டத்தை கைவிட செய்யலாம். இது மட்டும் இன்றி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், கேரள முதல்வர் பினராயி விஜயனும் மிகவும் நெருக்கமானவர்கள். இண்டி கூட்டணியின் மிக முக்கியமான தலைவராகவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தன்னை கூறிக் கொள்கிறார். எனவே தங்கள் கூட்டணியிடமே கூறி முதல்வர் ஸ்டாலின், கேரளா அரசின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்தலாம் என்று பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கருத்துக்களை முன்வைத்து வருகின்றனர். ஆனால் அவற்றிற்கு முதல்வர் மௌனம் கலைக்காமல் உள்ளார்.

விவசாயிகள் போராட்டம்:

இதனால் தமிழக விவசாய சங்கங்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் கேரள கம்யூனிஸ்ட் அரசுக்கு எதிராகவும் தொடர்ந்து போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் முல்லைப் பெரியாறு அணை அருகே கேரளா அரசு புதிய அணை கட்டும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய ஐந்து மாவட்டங்களில் தலா ஒரு லட்சம் வீதம் மொத்தம் 5 லட்ச விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று பிரதமராக புதிதாக பதவி ஏற்பவருக்கு அனுப்ப முடிவு செய்து, ஐந்து மாவட்ட விவசாயிகள் சங்கம் கையெழுத்து இயக்கம் ஒன்றை லோயர் கேம்ஸ் பென்னிகுவிக் மணிமண்டபத்தில் துவங்கியது.



இதில் அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கதிரவன், கேரளாவில் ஆளும் மார்க்சிஸ்ட் அரசு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க முயற்சி செய்கிறது. இப்படி தேசிய கட்சிகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடக்கூடாது. ஒரே கொள்கையுடன் இருக்க வேண்டும். விவசாயிகளுக்காக போராடுவதாக கூறும் கம்யூனிஸ்ட் கட்சியும் தமிழக விவசாயிகளை வஞ்சிக்கிறது என்று கூறியுள்ளார்.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News