Kathir News
Begin typing your search above and press return to search.

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மத்திய அமைச்சர் ஆவாரா?

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மத்திய அமைச்சர் ஆவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

கர்நாடகா முன்னாள் முதல்வர் குமாரசாமி மத்திய அமைச்சர் ஆவாரா?
X

KarthigaBy : Karthiga

  |  6 Jun 2024 11:57 AM GMT

கர்நாடகாவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநில தலைவராக இருப்பவர் குமாரசாமி. முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் இரண்டாவது மகன். முன்னாள் முதல்வர் ஆன இவர் சென்னப்பட்டணா எம்.எல்.ஏ.வாக இருக்கிறார். இம்முறை பா.ஜ.கூட்டணியுடன் மாண்டியா லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார்.

இவரை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் தொழிலதிபர் வெங்கடரமணே கவுடா களம் இறக்கப்பட்டார். ஓட்டு எண்ணிக்கையின் போது முதல் சுற்றில் இருந்து இறுதி சுற்று வரை குமாரசாமி முன்னிலை வகித்தார். ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று கருதப்பட்டது. ஆனால் அதையும் தாண்டி இரண்டு லட்சத்து 84 ஆயிரத்து 620 ஓட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். இவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைப்பது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்களுடன் டில்லியில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை நடத்தினார்.இந்த கூட்டத்தில் பங்கேற்க டில்லி வரும்படி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குமாரசாமியை போனில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுத்தார். பல்வேறு கூட்டணி கட்சித் தலைவர்களுடன் குமாரசாமியும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றார். குமாரசாமி மத்திய அமைச்சர் ஆவாரா என்பது விரைவில் தெரிந்து விடும்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News