Kathir News
Begin typing your search above and press return to search.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை- அண்ணாமலை!

2026 சட்டப்பேரவை தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க மாட்டோம். தமிழகத்தில் படிப்படியாக பாஜக வெற்றி பெறும் என்று அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை- அண்ணாமலை!
X

KarthigaBy : Karthiga

  |  7 Jun 2024 3:08 PM GMT

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:-

பாஜகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 35 இடங்களில் வெற்றி பெற்று இருக்கும் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் பழனிச்சாமிக்கும் எஸ்பி வேலுமணிக்கும் ஏதோ பிரச்சனை தொடங்கியுள்ளதாக இதை நான் பார்க்கிறேன். 2019ல் ஆளும்கட்சியாக இருந்தபோது கூட அதிமுகவால் மக்களவைத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. அதிமுக தலைவர்களை மக்கள் நிராகரித்துள்ளனர் என்பதை 2024 தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

பாஜக தொண்டர்கள் மொட்டை அடிப்பது, விரலை வெட்டுவது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. பொது இடங்களில் ஆட்டை வெட்டி வீடியோ வெளியிடுவது மிகவும் கண்டனத்திற்குரியது. நான் கோவையில் தான் இருக்கப் போகிறேன். திமுகவினருக்கு கோபம் இருந்தால் என் மீது கைவைத்து பார்க்கட்டும். தமிழகத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாததற்கு நான் தான் காரணம் என்று எஸ்.வி. சேகர் கூறியுள்ளார். அவர் யாரென்றே எனக்கு தெரியாது.

என்னுடைய செயல்பாடுகளால் தான் பாஜக தமிழகத்தில் இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைந்துள்ளது. கோவைத் தொகுதியில் முன்பு போட்டியிட்ட சிபி ராதாகிருஷ்ணனை விட நான் பெற்ற வாக்குகள் குறைவு என்று எஸ்.பி வேலுமணி தவறான புள்ளி விவரங்களை பகிர்ந்து உள்ளார். 2026 இல் பாஜக கூட்டணி ஆட்சி அமையும். அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்பு இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News