மேற்கு வங்க ஆளும் அரசின் வன்முறையில் பாதிக்கப்படும் பாஜகவினர்!! சுவேந்தா அதிகாரி ஆளுநருக்கு கடிதம்!
By : Sushmitha
நாடு முழுவதும் இருந்த லோக்சபா தேர்தல் பரபரப்புகள் அனைத்து முடிவு பெற்று, மீண்டும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளது. முன்னதாக, நாடு முழுவதும் கடைசி வாக்குப்பதிவு நடந்த நாளன்று மேற்கு வங்கத்தில் ஒரு சில இடங்களில் வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்தது. குறிப்பாக குல்டாலி பகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியை உள்ளுரை சேர்ந்த கும்பல் ஒன்று சூறையாடியதோடு, வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபேட் ஆகியவற்றை குளத்தில் வீசினர். இது அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு தேர்தல் முடிந்த பிறகும் பாஜக தொண்டர்கள் கடுமையாக தாக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து மேற்குவங்க ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ்ஸுக்கு, பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மேற்கு வங்கத்தில் ஒவ்வொரு தேர்தலுக்குப் பிறகும் பாஜகவின் தொண்டர்கள் ஆளும் திரிணமூல் கட்சியின் குண்டர்களால் தாக்கப்பட்டுள்ளனர். இந்த செயல் வழக்கமாகவே இருந்து வருகிறது. அதன்படி சமீபத்தில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் இதுவரை 20 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளது. அதில் சுமார் பத்தாயிரம் பேர் தங்களது வீட்டை இழந்துள்ளனர். அவர்கள் தற்பொழுது பாஜக சார்பில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின் பொழுது மத்திய ஆயுத படைகள் இருந்தும் அவர்களால் வன்முறையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஆகவே பாதிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று பார்வையிட்டு, அப்பாவிகள் எவரும் உயிரிழந்துள்ளனரா! என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று சுவேந்து அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.