வாழ்வின் ஒரு பகுதியாக யோகாவை கடைபிடியுங்கள்.. பிரதமர் மோடி பகிர்ந்த ஆரோக்கிய தகவல்..
By : Bharathi Latha
யோகாவை அனைவரும் தங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக கடைப்பிடிக்க பிரதமர் வலியுறுத்தியுள்ளார். பல்வேறு ஆசனங்கள், அவற்றின் நன்மைகள் குறித்த வழிகாட்டுதலை வழங்கும் வீடியோக்களின் தொகுப்பையும் அவர் பகிர்ந்துள்ளார். யோகா அமைதிக்கு காரணமாகி, வாழ்க்கையின் சவால்களை அமைதியுடனும், மன உறுதியுடனும் எதிர்கொள்ள நமக்கு உதவுகிறது என்றும் அவர் கூறினார். எதிர்வரும் யோகா தினத்தை முன்னிட்டு, பல்வேறு ஆசனங்கள், அவற்றின் பயன்கள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் வீடியோ பதிவுகளையும் மோடி பகிர்ந்துள்ளார். யோகாவை அனைவரும் தங்கள் வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக கடைப்பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறும் போது, "இன்று முதல் பத்து நாட்களில், உலக நாடுகள் 10-வது சர்வதேச யோகா தினத்தைக் கடைப்பிடித்து, ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தைக் கொண்டாடவுள்ளது. கலாச்சார, புவியியல் எல்லைகளைக் கடந்து, முழுமையான நல்வாழ்வைப் பின்தொடர்வதில் உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கானவர்களை யோகா ஒன்றிணைத்துள்ளது. இந்த ஆண்டு யோகா தினத்தை நெருங்கும் வேளையில், யோகாவை நமது வாழ்வின் ஒருங்கிணைந்த பகுதியாக மாற்றுவதற்கான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதும், மற்றவர்களை அதன் ஒரு பகுதியாக மாற்ற ஊக்குவிப்பதும் அவசியம்.
யோகா அமைதிக்குக் காரணமாகத் திகழ்கிறது. வாழ்க்கையின் சவால்களை அமைதியுடனும், மனவலிமையுடனும் வழிநடத்த உதவுகிறது. யோகா தினம் நெருங்கி வருவதால், பல்வேறு ஆசனங்கள், அவற்றின் நன்மைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் வீடியோக்களின் தொகுப்பை நான் பகிர்ந்துள்ளேன். இது உங்கள் அனைவரையும் தவறாமல் யோகா பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் என்று நம்புகிறேன்" என கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: News