Begin typing your search above and press return to search.
ஒடிசா முதல்வராக மோகன் சரண் மஜி தேர்வு!
ஒடிசா முதல்வராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

By :
ஒடிசா முதல்வராக பா.ஜ.கவைச் சேர்ந்த மோகன் சரண்மஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மக்களவை தேர்தலுடன் மாநில சட்டசபைக்கு சேர்த்து தேர்தல் நடந்தது. இதில் மொத்தம் உள்ள 147 தொகுதிகளில் 78 இடங்களில் பாஜக வென்று பெரும்பான்மையுடன் முதல் முறையாக ஆட்சி அமைக்கிறது. புதிய முதல்வரை தேர்வு செய்ய மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது .
இந்தக் கூட்டத்தில் பாஜக சட்டசபை குழு தலைவராக மோகன் சரண்மஜியை தேர்வு செய்தனர். இதனை அடுத்து மோகன் மஜி முதல்வராக இன்று பதவி ஏற்க உள்ளார். இவர் ஒடிசா சட்டசபைக்கு நான்கு முறை தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு ஆளுநர் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருக்கிறார். பாஜகவைச் சேர்ந்த பார்வதி பரிதா துணை முதல்வராக பொறுப்பேற்க உள்ளார்.
SOURCE :Newspaper
Next Story