Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் மொழிக்கு திமுக ஸ்டாலின் அரசு என்ன செய்தது?- உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை!

உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புகள் வெளியிடக் கூடாது என்று ஹைகோர்ட் கேள்வி எழுப்பி உள்ளது.

தமிழ் மொழிக்கு திமுக ஸ்டாலின் அரசு என்ன செய்தது?-  உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த உலகத் தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை!
X

KarthigaBy : Karthiga

  |  12 Jun 2024 6:34 PM GMT

உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்புகளை வெளியிடக்கூடாது என கேள்வி எழுப்பிய சென்னை உயர்நீதிமன்றம் இரண்டு வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டது. மாநிலத்தில் பல்வேறு இடங்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகளை ஆவணப்படுத்த வேண்டும் . தமிழ் வளர்ச்சிக்கு ஒதுக்கிய நிதி விபரங்களை வழங்க வேண்டும். வெளிநாடு வாழ் தமிழர் குறைதீர் ஆணையம் அமைக்க வேண்டும்.

உள்நாட்டு விமானத்தில் தமிழில் அறிவிப்புகளை வெளியிட வேண்டும். சென்னையில் தமிழ் பல்கலை அமைக்க வேண்டும் என உலகத்தமிழ் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை பொறுப்பு தலைமை நீதிபதி ஆர். மகாதேவன் நீதிபதி மற்றும் முகமது சபீக் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் கனகராஜ் ஆஜர் ஆகி சமஸ்கிருத மொழிக்கு ஆயிரம் கோடி ரூபாய் வரை ஒதுக்கும் மத்திய அரசு தமிழ் மொழிக்கு குறைந்த அளவு நிதியை ஒதுக்குகிறது.

இலங்கை, பிரான்ஸ் நாட்டு விமானங்களில் கூட தமிழில் அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. ஆனால் தமிழகத்தில் தமிழில் அறிவிப்புகள் வெளியிடுவதில்லை என்றார் .அதற்கு தமிழக அரசு தரப்பில் தஞ்சாவூர் தமிழ் பல்கலை உள்ளது. தமிழ் மொழி வளர்ச்சிக்கு அரசு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறது என தெரிவிக்கப்பட்டது .இதை அடுத்து தமிழ் கல்வெட்டுகளை ஆவணப்படுத்தக் கோரிய வழக்குகளில் மாநில தொல்லியல் துறையை ஏன் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள் மாநில தொல்லியல் துறையை தாமாக முன்வந்து எதிர் மனுதாரராக சேர்த்தனர்.

மேலும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு 26 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டதாக கூறி மதுரை கிளையில் தாக்கல் செய்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர் குறைதீர் ஆணையம் அமைக்கும் விவகாரமும் முக்கியத்துவம் ஆனது எனக் கூறிய நீதிபதிகள் விவகாரத்தில் மத்திய அரசு பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர். தொடர்ந்து உள்நாட்டு விமானங்களில் ஏன் தமிழில் அறிவிப்பு வெளியிடக்கூடாது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள் இது தொடர்பாக மத்திய அரசு இரு வாரங்களில் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்குகளை தள்ளி வைத்தனர்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News