பாதிரியாரை விமர்சித்த பினராயி விஜயன்.. கிறிஸ்தவர்கள் கடும் எதிர்ப்பு..
By : Bharathi Latha
லோக்சபா தேர்தலில் கேரளாவில் உள்ள, 20 தொகுதிகளில், ஒரு தொகுதியில் மட்டுமே, கேரளாவை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு, முதல்வர் பினராயி விஜயன் பொறுப்பேற்க வேண்டும் என்ற கருத்து பல்வேறு தரப்பில் இருந்து எழுந்தது. இந்த நிலையில் இது தொடர்பாக கேரளாவின் யாக்கோப்படை சிரியன் திருச்சபையின் முன்னாள் பிஷப் கீ வர்கீஸ் கூரிலோஸ் கருத்து தெரிவிக்கையில், 'தேர்தல் தோல்வியிலிருந்து கம்யூனிஸ்டுகள் பாடம் கற்க வேண்டும். இல்லா விட்டால் மேற்கு வங்கம், திரிபுராவில் ஏற்பட்ட நிலை கட்சிக்கு ஏற்படும். கடந்த 2018ல் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் கொரோனா காலத்தில் திறம்பட செயல் ஆற்றியதால் தான் இடது சாரி முன்னணி 2021ல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது என்றார்.
இந்த ஒரு கருத்திற்கு முதல்வர் நேரடியாக களம் இறங்கி பாதிரியாரை கிண்டல் செய்து இருக்கிறார். இதுபற்றி முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "பிஷப்பின் அறிக்கையை பார்த்தேன். இதிலிருந்து பாதிரியார்களில் கூட முட்டாள்கள் இருக்கலாம் என தெரிகிறது'' என்றார். முதல்வர் அவர்களின் கருத்துதான் தற்போது கேரள முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு இருக்கிறது.
அது மட்டும் கிடையாது முதல்வரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கேரள எதிர்க்கட்சி தலைவர் காங்கிரசின் சதீசன் கூறும் போது, "பினராயி விஜயன் விமர்சனங்களை சகித்துக் கொள்ள வேண்டும். அவர் தன் கட்சிக்குள் அல்லது வெளியே எந்த விமர்சனத்தையும் பொறுத்துக் கொள்ள மாட்டார் என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு" என கூறினார்.
Input & Image courtesy: News