உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா.. நார்வே தூதர் புகழாரம்..
By : Bharathi Latha
உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை யோகா ஒன்றிணைக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடியுடன் உடன்பட்ட இந்தியாவுக்கான நார்வே தூதர் மே-எலின் ஸ்டெனர், உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய பரிசுகளில் ஒன்றாகும் என்று குறிப்பிட்டுள்ளார். ஜூன் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படும் 10வது சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் மோடியின் ஆன்லைன் பதிவுக்கு பதிலளிக்கும் வகையில் அவரது கருத்து வந்து உள்ளது. மேலும் அவர் யோகா செய்யும் வீடியோ மற்றும் படங்களையும் பகிர்ந்துள்ளார்.
உலகிற்கு இந்தியா அளித்த மிகப்பெரிய கொடை யோகா. உலகம் முழுவதும் அதிகரித்து வரும் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு யோகா சிறந்த மருந்தாக உள்ளது. அமைதியான உலகை உருவாக்குவதில் யோகா முக்கிய பங்கு வகுக்கிறது. இந்திய கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக யோகா விளங்குகிறது. யோகாவிற்கும் உடல்நலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது, யோகாவின் பயன்கள் ஏழைகளையும் சென்றடைய வேண்டும். யோகாவின் பயன்களை உலக நாடுகள் அனுபவித்து வருகிறது. நல்ல உடல் ஆரோக்கியத்திற்கு யோகா அவசியம்; யோகா செய்வதன் மூலம் அமைதி கிடைக்கிறது. தினந்தோறும் நாம் அனைவரும் யோகாசனம் செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.
மேலும் இன்னும் பத்து நாட்களில், உலகம் 10வது சர்வதேச யோகா தினம் கொண்டாட இருக்கிறது. யோகா கலாச்சார மற்றும் புவியியல் எல்லைகளைத் தாண்டி, உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை முழுமையான நல்வாழ்வைத் தேட உதவுகிறது என கூறி இருக்கிறார்.
Input & Image courtesy: NDTV News