வடகிழக்கு மாநிலங்களை ஆக்கிரமிக்க முயலும் மியான்மர் முஸ்லீம்கள்.. மணிப்பூரில் மீண்டும் பதட்டமான சூழல்..
By : Bharathi Latha
நம் அண்டை நாடாக விளங்கும் மியான்மருடன் எல்லையை பகிர்ந்து கொள்ளும் வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஊடுருவல்காரர்களால் மீண்டும் தலைவலி ஏற்பட்டு உள்ளது. மியான்மரில் கலவரம் தீவிரம் அடைந்துள்ளதை அடுத்து, அங்குள்ள மக்கள் அகதிகளாக மணிப்பூரில் தஞ்சம் அடைந்து வருகிறார்கள். இது தவிர, மியான்மரை சேர்ந்த பலர், சட்டவிரோதமாக மணிப்பூருக்குள் ஊடுருவும் சம்பவங்களும் அதிகரித்துள்ளன. தொடர்ச்சியாக இது குறித்து செய்திகளும் வெளிவந்த வண்ணம் இருக்கிறது.
மணிப்பூரில் உள்ள டெங்னோபால் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஊடுருவிய மியான்மர் அகதிகள், அங்குள்ள எல்லைப் பகுதியில் வீடுகளை கட்டி குடியேறி உள்ளதை மாரிங் பழங்குடியினத்தை சேர்ந்த தன்னார்வலர்கள் உறுதி செய்து உள்ளனர். மியான்மர் அகதிகளின் ஊடுருவல்களை கட்டுப்படுத்த முடியவில்லை என்று அங்கு வசிக்கும் உள்ளூர் கிராம தலைவர்கள் கவலை தெரிவித்து உள்ளனர்.
இந்த ஊடுருவல்கள் தொடர்பாக, முதல்வர் பைரேன் சிங்குக்கு பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் நாகா மக்கள் முன்னணி MLA ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். இதன் காரணமாக மணிப்பூரில் தற்போது மீண்டும் பரபரப்பு ஏற்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News