ஒடிசாவில் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் சமூக விரோதிகள் : சாலையில் பசு மாடு பலியிடப்பட்டதால் பதட்டம்
By : Sushmitha
சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் ஒடிசாவில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக மோகன் சரண் மஜி பதவி ஏற்றுள்ளார். இந்த நிலையில் அங்கு உள்ள பாலசோர் நகரில் புஜாகியா பகுதியில் கடந்த 17 ஆம் தேதி சிறுபான்மை சமூகத்தினர் நடுரோட்டில் மாட்டை பலியிட்டு அதன் ரத்தத்தை வழிய விட்டதாக செய்திகள் வெளியானது.
இதனை அடுத்து அந்தப் பகுதிக்கு வந்த மற்றொரு பிரிவினர், ரத்தம் வழிந்து கிடந்த இடத்தில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதனால் எதிர் தரப்பினர் அவர்கள் மீது கல் வீசியுள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களும் பதிலுக்கு கல் வீசினர். இதனை அடுத்து இரு தரப்பினருக்கும் மோதல் பெரும் கலவரமாக வெடித்து, அருகில் இருந்த கடைகள், வீடுகள் மற்றும் பல பொது சொத்துக்களும் சேதமடைந்துள்ளது.
இந்த தாக்குதல் குறித்த தகவலை அறிந்த போலீசார் தடியடி நடத்தி கலவரத்தை கட்டுப்படுத்தினர். மேலும் கலவரம் தொடர்பாக இதுவரை 30க்கும் மேற்பட்டவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி பாலசோர் நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பதட்டமான இடங்களில் இன்டர்நெட் சேவையும் துண்டிக்கப்பட்டுள்ளது.