Kathir News
Begin typing your search above and press return to search.

திமுக ஆட்சியில் தமிழகம் எங்கும் போதைப்பொருள் நடமாட்டம்: போதைப்பொருட்களின் கூடாரமா தமிழ்நாடு?

திமுக ஆட்சியில் தமிழகம் எங்கும் போதைப்பொருள் நடமாட்டம்: போதைப்பொருட்களின் கூடாரமா தமிழ்நாடு?

SushmithaBy : Sushmitha

  |  22 Jun 2024 5:15 PM GMT

தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியில் போதைப் பொருள் பதிவு செய்யப்பட்ட நிலையில் காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கடந்த இருபதாம் தேதி இரவு நேரத்தில் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது எட்டு பாலித்தீன் பாக்கெட்டுகளில் தலா ஒரு கிலோ எடை கொண்ட போதை பொருட்கள் பதிக்கி வைக்கப்பட்டுள்ளன.

இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், இனிகோ நகர் பகுதியில், ஐஸ் என்று அழைக்கப்படும் கிறிஸ்டல் மெத்தம் பீட்டாமைன் என்ற உயர்ரக போதை பொருட்கள் புழக்கத்தில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் இந்த போதைப் பொருட்கள் 60% தூய்மையானவை எனவும், சர்வதேச அளவில் இந்த போதைப் பொருட்களின் மதிப்பானது ரூபாய் 24 கோடி எனவும் கூறப்படுகிறது.

இதனை அடுத்து இந்த உயர்ரக போதைப் பொருள்களை பதிக்கி வைத்திருந்த நிர்மல்ராஜ் மற்றும் அவரது மனைவி சிபானி அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் பல உயிர்கள் பலியாகிக் கொண்டிருக்கும் நிலையில் தூத்துக்குடியில் இப்படி ஒரு ரக போதைப் பொருள் பதிக்கப்பட்ட சம்பவம் வெளியாகி தூத்துக்குடி முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

முன்னதாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவர் தமிழகத்தில் ஆளும் கட்சியாக உள்ள திமுகவின் முக்கிய பொறுப்பில் இருந்து வந்த ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் இவர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோருடன் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். மேலும் தற்போது அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News