மறு பயன்பாட்டு ராக்கெட் 'புஷ்பக்' மூன்றாவது சோதனை வெற்றி - இஸ்ரோ சாதனை!
செயற்கைக்கோள்களை விண்வெளியில் நிலை நிறுத்திவிட்டு பூமிக்கு திரும்பி வரும் மறு பயன்பாட்டு ராக்கெட் மூன்றாவது முறையாக வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது.
By : Karthiga
செயற்கைக்கோள்களையும் விண்கலன்களையும் சுமந்து சென்று விண்வெளியில் நிலை நிறுத்திவிட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் 'புஷ்பக்' என்ற மாதிரி பயன்பாட்டு ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆய்வு மையம் உருவாக்கியுள்ளது. இந்த மறு பயன்பாட்டு ராக்கெட் ஏற்கனவே இரண்டு தடவை வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இந்நிலையில் அதன் மூன்றாவது மற்றும் இறுதி கட்ட சோதனை நேற்று கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவில் உள்ள ஏரோநாட்டிக்கல் சோதனை தளத்தில் நடந்தது.
இந்த தடவை பலத்த காற்று மற்றும் சவாலான சூழ்நிலை இடையே 'புஷ்பக்' மறு பயன்பாட்டு ராக்கெட் எப்படி செயல்படுகிறது என்பதை அறியும் வகையில் சோதனை நடத்தப்பட்டது. இந்திய விமானப்படையின் 'சினூக்' ஹெலிகாப்டரில் 4.5 கிலோமீட்டர் வேகத்தில் இருந்து மறுப்பயன் பாட்டு ராக்கெட் விடுவிக்கப்பட்டது. அதன் பிறகு பூமியை நோக்கி ராக்கெட் வெற்றிகரமாக திரும்பியது. வழியிலேயே தவறுகளைத் தானாகவே சரி செய்தது.
ஓடுதளத்தின் மையப்பகுதியில் கிடைமட்டமாக வெற்றிகரமாக தரை இறங்கியது. அப்போது அதன் வேகம் மணிக்கு 320 கிலோமீட்டர் ஆக அதிகரித்தது. இது போர் விமானத்தின் வேகத்தை விட அதிகம். ஆனால் தரையைத் தொட்டவுடன் வேகம் மணிக்கு 100 km ஆக குறைந்தது. இந்த சோதனை ஓட்டத்தின் திட்ட இயக்குனராக முத்துப்பாண்டியன் செயல்பட்டார். பி.கார்த்திக் ஏவுகலன் இயக்குனராக இருந்தார் .
விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் தலைமையிலான திட்டத்தில் இஸ்ரோவின் பல்வேறு மையங்களும் ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தைவான் விண்வெளி மையமும் பங்கேற்றன. இந்திய விமானப்படை, கான்பூர் ஐ.ஐ.டி, இந்திய எண்ணெய் கழகம் , இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆகியவற்றின் ஆதரவுடன் சோதனை நடத்தப்பட்டது .இதில் பங்கேற்ற குழுவுக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார்.
SOURCE :Newspaper