மத்திய நிதியமைச்சர் குறித்து அவதூறு பேச்சு.. இனியவனுக்கு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்..
By : Bharathi Latha
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கவிஞர் இனியவன் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். நிர்மலா சீதாராமன் அவர்கள் தேர்தலில் போட்டியிடாமலே அமைச்சராக இருந்துகொண்டு தமிழக MPக்களிடம் கேள்வி எழுப்புவது குறித்து சாடியிருந்தார். நிர்மலா சீதாராமனைப் பற்றி தகாத வார்த்தைகளைக் கூறியதாகவும் கூறப்படுகிறது. இவருடைய பேச்சின் வீடியோ சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலானது.
இனியவனின் பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். "மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்த கருத்துகளை தமிழக பாஜக வன்மையாகக் கண்டிக்கிறது. மேலும் இந்த நபர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறையிடம் கோரிக்கை வைக்கிறோம்" என்றும் அண்ணாமலை அவர்களும் தன்னுடைய வன்மையான கண்டனத்தை ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில் கவிஞர் இனியவனின் தரக்குறைவான பேச்சு பற்றி தேசிய மகளிர் ஆணையத்திலும் புகார்கள் பதிவுசெய்யப்பட்டுள்ளன. அந்தப் புகார்களின் அடிப்படையில் தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல்துறை டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கவிஞர் இனியவனின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆணையம், அவரது பேச்சுக்கு எதிரான புகார்கள் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 நாட்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு இருக்கிறது.
Input & Image courtesy:News