Kathir News
Begin typing your search above and press return to search.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை அவர்களின் தலைமையில் பாஜகவினர் மரியாதை!

சொல்லின் செல்வர் ,சிலம்பு செல்வர் என்று பல்வேறு புகழை தனதாக்கிய ம.பொ.சி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அண்ணாமலை அவர்களின் தலைமையில் அவரது திருவுருவ சிலைக்கு இன்று மரியாதை செய்த செயல் நிகழ்ந்தது.

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலை அவர்களின் தலைமையில் பாஜகவினர் மரியாதை!

KarthigaBy : Karthiga

  |  26 Jun 2024 1:26 PM GMT

சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் 1956-ஆம் ஆண்டில், தமிழர்க்களுக்கென தமிழ்நாடு தனிமாநிலம் அமைக்க போராடியவர்களுள் மிக முக்கியமானவர் என்பதால் தமிழ்த்தேசத் தந்தையாகப் போற்றப்படுகிறார். தமிழகத்தைச் சேர்ந்த இந்திய விடுதலைப் போராட்ட வீரரும் சிறந்த தமிழறிஞரும் ஆவார்.இவர் ம.பொ.சி. என அழைக்கப்படுகிறார். சிலப்பதிகாரத்தின் மீது இவர் கொண்டிருந்த ஆளுமையின் காரணமாக இவர் சிலம்புச் செல்வர் என அழைக்கப்பட்டார். 2006-ஆம் ஆண்டில் இவரது நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி சிறப்பித்தது.

'சிலம்புச் செல்வர்' என்ற விருது, சொல்லின் செல்வர் ரா.பி. சேதுப்பிள்ளை அவர்களால் வழங்கப்பெற்றது. சென்னை, மற்றும் அண்ணாமலைப் பல்கலைக் கழகங்கள் அவருக்கு 'டாக்டர்' பட்டங்கள் வழங்கிச் சிறப்பித்தன. மதுரைப் பல்கலைக் கழகம், 'பேரவைச் செல்வர்' என்ற பட்டம் வழங்கியது.மத்திய அரசு, பத்மஸ்ரீ விருது தந்து போற்றியது. தமிழக மேலவையின் தலைவராகப் பணியாற்றினார். 'செங்கோல்' என்ற ஒரு வார இதழை நடத்தி வந்தார். தமிழ் முரசு என்ற இதழை நடத்தினார். சென்னை மாநகராட்சியில் ஆல்டர்மேன் மற்றும் கல்விக் குழுத் தலைவராகப் பணியாற்றினார். இப்படி சிறப்பு வாய்ந்த ம.பொ.சி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டு அண்ணாமலை அவர்களின் தலைமையில் ம.பொ.சி அவர்களின் திருவுருவச் சிலைக்கு மரியாதை செய்யும் நிகழ்வு நடந்தது. அதைப் பற்றி அண்ணாமலை தனது வலைதள பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது,

"சிறந்த தமிழறிஞரும், சிலப்பதிகாரத்தின் புகழை முதலில் பரப்பிய பெருமைக்குரியவருமான ஐயா ம.பொ.சி. அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் ஐயா ம.பொ.சி. அவர்களின் குடும்பத்தாருடன், சென்னை தி.நகரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலையணிவித்து வணங்கினோம். சுதந்திரப் போராட்ட வீரர். மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்பட்ட போது, சென்னை, திருத்தணி உள்ளிட்ட பகுதிகள் தமிழகத்துடன் இணைந்திருக்கப் பல போராட்டங்களை நடத்தி வெற்றி கண்டவர். சிலப்பதிகாரம், பாரதியார், வ.உ.சி., வள்ளலார், திருவள்ளுவர், கட்டபொம்மன் என நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளவர். ஐயா வ.உ.சி. அவர்களுக்குக் கப்பலோட்டிய தமிழன் என்று புகழாரம் சூட்டிப் பெருமைப்படுத்திய சிலம்புச் செல்வர் ம.பொ.சி. அவர்கள் புகழைப் போற்றி வணங்குகிறோம்". இவ்வாறு அவர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News