Kathir News
Begin typing your search above and press return to search.

எமர்ஜென்சி காலத்திலும் இளைஞர்களுடன் நின்ற மோடி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

எமர்ஜென்சி காலத்திலும் இளைஞர்களுடன் நின்ற மோடி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள்!

SushmithaBy : Sushmitha

  |  27 Jun 2024 9:18 AM GMT

1975 ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு எமர்ஜென்சி எனப்படும் அவசரநிலை பிரகடனம் செய்தது. இந்த அவசரநிலை பிரகடனம் பிறப்பிக்கப்பட்டு கடந்த ஜூன் 25ஆம் தேதியுடன் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறது. இதனால் அவசரநிலை பிரகடனம் குறித்த செய்திகளும், இன்று பிரதமராக உள்ள நரேந்திர மோடி அன்றைய அவசர நிலைக்கு எதிராக மேற்கொண்ட பிரச்சாரங்கள் மற்றும் கைதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் மேற்கொண்ட வேடங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அதாவது ஜூன் 25, 1975 ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அவசர நிலையானது அன்று தொடங்கப்பட்டது அல்ல அதற்கு முன்னதாகவே 1974 ஆம் ஆண்டு குஜராத்தில் நவ நிர்மான் அந்தோலன் என்ற பெயரில் மாணவர்கள் தலைமையில் காங்கிரஸ் அரசின் ஊழல் மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மாபெரும் போராட்டம் நடைபெற்றது. அந்தப் போராட்டத்தில் மாணவர்களின் எழுச்சியை உணர்ந்த இன்றைய பிரதமர் நரேந்திர மோடி தனது 25 வது வயதில் இளைஞர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக நின்றார். மேலும் அப்பொழுது ஆர்.எஸ்.எஸ் இளம் பிரச்சாரராக இருந்த பிரதமர் மோடி நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்ட பொழுது, அதற்கு எதிரான போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.


மேலும் அந்த காலகட்டத்தில், நாடு முழுவதும் பேச்சு சுதந்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் கட்டுப்படுத்தப்பட்டன, இன்றும் ஜனநாயகத்தின் இருண்ட காலமாக அந்த காலம் குறிப்பிடப்படுகிறது. எதிர்க்கட்சிகள் அரசிற்கு எதிராக பேசுவோர் என அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதனால் ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்த பிரதமர் மோடி எமர்ஜென்சிக்கு எதிராக மக்களை திரட்டும் முயற்சியில் ஈடுபட்டிருந்தார். மேலும் கைதில் சிக்காமலும் இருக்கும்படி அவருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. இதனால் போலீசாரிடம் சிக்காமல் சர் தார்ஜி, ஹிந்து சாமியார் என பல வேடங்களில் குஜராத்தின் பல பகுதிகளுக்கு சுற்றி வந்து அவசர நிலைக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தார்.


அதுமட்டுமின்றி மிசா திட்டத்தின் கீழ் முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகும் காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், அவசர நிலைக்கு எதிராகவும், புரட்சியை முன்னெடுத்து காங்கிரஸ் அரசின் தவறை சுட்டிக்காட்டுவதில் அவருடைய கட்டுரைகளும், கடிதப் போக்குவரத்தும் முக்கிய பங்கு வகித்ததாக கூறப்படுகிறது. மேலும் அன்று அரசின் அடக்குமுறை தொடர்பான செய்திகளையும், கட்டுரைகளையும், சர்வதேச ஊடகங்களில் வெளியிடவும் பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் மோடி. அதோடு சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்ட புகைப்பட நகல்களையும் தனது வெளிநாட்டு நண்பர்களின் உதவியுடன் பெற்று, அதனை சிறையில் உள்ள தலைவர்களுக்கு வழங்கவும் மோடி ஏற்பாடு செய்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News