Kathir News
Begin typing your search above and press return to search.

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய திமுக! மீண்டும் பாரபட்சம் காட்ட தொடங்கிய மாடல் அரசு! வலுக்கும் விமர்சனங்கள்!

உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறிய திமுக! மீண்டும் பாரபட்சம் காட்ட தொடங்கிய மாடல் அரசு! வலுக்கும் விமர்சனங்கள்!
X

SushmithaBy : Sushmitha

  |  27 Jun 2024 2:31 PM GMT

எந்த மாநிலங்களிலும் நிகழாத ஒன்று தமிழகத்தில் தான் தொடர்ச்சியாக நிகழ்ந்து வருகிறது. அதாவது இந்து கோவில்களை நிர்வகிப்பதற்கு இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு கட்டுப்பாடு இருக்கிறது. ஆனால் தேவாலயங்கள் மற்றும் மசூதிகளை நிர்வகிப்பதற்கு எந்த ஒரு அரசின் கட்டமைப்பும் அமைக்கப்படவில்லை. தைரியம் இருந்தால் அனைத்து மதத்திற்கும் ஒரே மாதிரியான கட்டமைப்புகளை அமையுங்கள் என்று சமீபத்தில் மன்னார்குடி ஜீயர் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ஆவேசமாக குற்றம் சாடி இருந்தார். அதேபோன்று இந்து சமய அறநிலையத்துறை என்ற ஒரு பெயரில் இந்து கோவில்களின் சொத்துக்களை தமிழக அரசு திருடுவதாகவும், அரசு ஊழியர்களே கோவில் சொத்துக்களை பயன்படுத்துவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்க வேல் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

மேலும், பழமையான தொன்மையான ஐந்தாயிரம் கோவில்களை புதுப்பிப்பதாக திருப்பணி செய்ததாக கூறுகிறார்கள். ஆனால் திருப்பணி என்ற பெயரில் பழமையான கல்வெட்டுகளையும், தொன்மைகளையும் அழித்து வருகின்றனர். இந்து சமய அறநிலையத்துறை கோயில்களை புதுப்பிக்க கூடாது. தொல்லியல் துறை தான் புதுப்பிக்க வேண்டும் என்று முன்னாள் ஐ.ஜி பொன்மாணிக்கவேல் வலியுறுத்தினார்.

இதைத் தவிர தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மகனும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இந்து சமயத்தில் முக்கிய நம்பிக்கையாக விளங்கி வருகின்ற சனாதனத்தை வேரோடு அழிப்பேன் என்று உரக்க கூறினார். இந்த நிலையில், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கடந்த ஜூன் 20 அன்று தொடங்கிய சட்டமன்ற கூட்ட தொடரில், 10 புதிய திட்டங்களை வெளியிட்டார். அதில் முதல் முறை ஹஜ் யாத்திரை செல்பவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் மானியத்தை வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஹஜ் மானியத்தை 2022க்குள் நிறுத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் இது அரசியலமைப்பிற்கு எதிரானது மற்றும் குரானின் போதனைகளுக்கு முரணானது என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை அடுத்து 2017 ஆம் ஆண்டு ஹஜ் மானியம் வழங்குவதை மத்திய அரசு நிறுத்தியது. இருப்பினும் தமிழக அரசு ஹஜ் யாத்திரிகர்களுக்கு நிதி உதவி அளித்து வருகிறது. மேலும் இந்த மானியத்தை சமீபத்தில் உயர்த்தியும் உள்ளது கடுமையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

ஏனென்றால் வரி செலுத்துவோரின் பணத்தை குறிப்பிட்ட மத யாத்திரைகளுக்கு நிதியாக வழங்கக்கூடாது எனவும், இந்து சமய அறநிலையத்துறை சிறப்பு தரிசனம் மற்றும் அர்ச்சனை டிக்கெட் மூலம் இந்து கோவில்களில் வருமானம் ஈட்டி வருகிறது. ஆனால் இந்துக்களின் புனித யாத்திரைக்கு இது போன்ற மானியங்கள் எதுவும் கிடைப்பதில்லை என விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் வலுவெடுத்துள்ளது.

அதுமட்டுமின்றி, இந்து யாத்திரிகளை புறக்கணித்துவிட்டு ஹஜ் மானியங்களுக்காக வரி செலுத்துவோரின் நிதியை திமுக அரசு ஒதுக்கியதில் ஒரு ஏற்றத்தாழ்வை எடுத்துக்காட்டுகிறது என வாதங்கள் முன்வைக்கப்படுகிறது.

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News