Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய அமைச்சர் சேகர்பாபுக்கு இந்து முன்னணி கண்டனம்!

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசியதாக அமைச்சர் சேகர்பாபுவுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

தமிழக வரலாற்றை மறைத்து சட்டசபையில் பேசிய அமைச்சர் சேகர்பாபுக்கு இந்து முன்னணி கண்டனம்!

KarthigaBy : Karthiga

  |  29 Jun 2024 1:20 AM GMT

ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அறிக்கை

கோவில்களை தமிழர்கள் கலவரமாக பார்க்காமல் கலையாக பார்த்ததால் கோவில் நிறைந்த மாநிலமாக தமிழகம் இருக்கிறது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சட்டசபையில் பேசியுள்ளார். எந்த சட்டசபையில் இன்று இவர் பேசுகிறாரோ அந்த இடத்தில் தான் சென்னை மல்லீஸ்வரர் கோவில், சென்னை கேசவ பெருமாள் கோவில் ஆகியவை இருந்தன .இவற்றை ஆங்கிலேயர்கள் இடித்து தான் ஜார்ஜ் கோட்டையை கட்டினர்.

மயிலாப்பூர் கடலை ஒட்டி இருந்த கபாலீஸ்வரர் கோவிலை அடுத்து அங்கு கட்டப்பட்டது தான் செயின்ட் தாமஸ் சர்ச். இப்போதுள்ள கோவில் அதன் பின் கட்டப்பட்டது. பல கோவில்களை மதவெறி பிடித்த ஆங்கிலேயர்கள் இடித்த வரலாறு உள்ளது .மதுரை மீனாட்சி அம்மன் கோவிலும் ஸ்ரீரங்கமும் 40 ஆண்டு முகலாயர்களின் ஆக்கிரமிப்பால் மூடி கிடந்த சரித்திரம் அமைச்சருக்கு தெரியாது. ஆட்சிக்கு வந்ததிலிருந்து நூற்றுக்கணக்கான கோவில்களை இடித்து தரைமட்டம் ஆக்கி உள்ளனர்.

தமிழகத்தில் 300 கோவில்களை இடித்து மசூதி தர்கா கட்டியதற்கு ஆதாரபூர்வமான பட்டியல் இருக்கிறது. இஸ்லாமிய படையெடுப்பாளர்களை பக்தி நெறியோடு வாழ்ந்த தமிழ் மன்னர்களும், பாளையக்காரர்களும், வடக்கே இருந்த மன்னர்களும், விஜய நகரப் பேரரசும் ,மராட்டிய வீரசிவாஜி மற்றும் வம்சத்தவர்களும் தடுத்து நிறுத்தியதால் தான் தமிழக கோவில்கள் காப்பாற்றப்பட்டன என்பதை சேகர்பாபு மறக்க வேண்டாம் .இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News