Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழ் ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை விமர்சிக்கும் திமுக - இது தமிழர் விரோத செயல் அல்லாமல் வேறு என்ன?

சமீபத்தில் செங்கோலிற்கு எதிரான சர்ச்சை கருத்தை சமாஜ்வாடி கட்சியின் எம்.பி கூறி இருக்கிறார். இதற்கு எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காமல் திமுக அரசு மவுனம் காப்பதில் இருந்து செங்கோலுக்கு எதிராக திமுகவும் தனது வெளிப்பாட்டை உணர்த்தி இருப்பது தெரிகிறது.

தமிழ் ஆதீனங்கள் வழங்கிய செங்கோலை விமர்சிக்கும் திமுக - இது தமிழர் விரோத செயல் அல்லாமல் வேறு என்ன?

KarthigaBy : Karthiga

  |  30 Jun 2024 3:14 PM GMT

சமீபத்தில் செங்கோல் பற்றிய எதிர்ப்பும் செங்கோலுக்கு எதிரான விமர்சனமும் அதிகரித்து வருகிறது. செங்கோலின் பெருமை தெரியாதவர்களும் தமிழருக்கு எதிரானவர்களும் தான் இந்த விமர்சனத்தை தொடர்ந்து செய்வார்கள். சமீபத்தில் இந்தியா கூட்டணியில் உள்ள சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த எம்.பி செங்கோலிற்கு எதிரான கருத்தைக் கூறி சர்ச்சையில் சிக்கியிருந்தார். இதற்கு ஆதரவு தெரிவிப்பது போல் திமுக எந்த ஒரு எதிர் கருத்தையும் வெளியிடவில்லை. இதிலிருந்தே திமுக தமிழருக்கு எதிரான செயலில்தான் ஈடுபடுகிறது என்பது தெள்ளத்தெளிவாக தெரிகிறது.

செங்கோல் என்பது மன்னர் ஆட்சியின் அடையாளம். இப்பொழுது நடப்பது மக்களாட்சி. எனவே செங்கோலை அகற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர். நம் நாட்டின் தேசிய சின்னமாக விளங்கும் நான்கு முகம் கொண்ட சிங்கம் பதித்த அசோகர் தூண் கூட மன்னர் ஆட்சியின் அடையாளம் தான் அதனால் அந்த கட்சிகள் அதையும் அகற்ற சொல்வார்களா என்ன? செங்கோலை அருங்காட்சியகத்தில் வைக்க வேண்டும் என்று கூறுகிறார்களே! மேயர் பதவி ஏற்பின் போது மேயரிடம் செங்கோல் வழங்கப்படுகிறதே அது எதற்காக?

செங்கோல் மன்னராட்சியின் அடையாளம் என்றால் ஜவஹர்லால் நேரு பதவி ஏற்ற போது அவரிடம் செங்கோல் வழங்கப்பட்டதே அது எதற்காக? செங்கோலை அகற்ற வேண்டும் என்று குரல் கொடுத்துக் கொண்டு செங்கோலுக்கு எதிரான விமர்சனத்தை முன் வைத்திருக்கும் எதிர்க்கட்சிகளே இந்த கேள்விகளுக்கெல்லாம் உங்களால் விடை கூற முடியுமா? ஒடிசா தேர்தலின் போது வி.கே பாண்டியன் மீதான மோடியின் விமர்சனத்தை தமிழர்களுக்கு எதிரான விமர்சனம் என்றும் தமிழர்களை அவமதிக்கும் செயல் என்றும் மோடியை குறை கூற வரிந்து கட்டிக்கொண்டு வந்த திமுக அரசு, செங்கோலிற்கு எதிராக ஒரு வட இந்திய கட்சி குறை கூறும்போது அதற்கு எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருப்பது மிகுந்த அபத்தமான செயலாகத் தெரிகிறது.

இது தமிழர்களுக்கு எதிரான செயலாகவும், தமிழர்களை அவமதிக்கும் செயலாகவும் திமுகவிற்கு தெரியவில்லையா? தமிழகத்தில் 20 ஆதீனங்கள் சேர்ந்து வழங்கிய செங்கோலை அகற்றச் சொல்லி வட இந்தியக் கட்சி குறை கூறும் போதும், குரல் கொடுக்கும் போதும் திமுக அரசு ஆதரித்து வருகிறது. செங்கோல் என்பது தமிழ் பாரம்பரியத்தின் அடையாளமாகவும், இந்து மதத்தின் அடையாளமாகவும் காணப்படுகிறது. எனவே திமுக அரசு இந்துக்களுக்கு எதிராக செயல்படும் அரசாக விளங்குகிறது என்பதில் துளியும் ஐயமில்லை.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News