அமெரிக்க மாநாட்டில் சிறப்பு விருந்தினர்.. இளம் அரசியல் தலைவராக மிளிரும் எஸ்.ஜி.சூர்யா..
By : Bharathi Latha
செயிண்ட் லூயிஸ் நகரில் நடைபெறும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் கூட்டமைப்பு நடத்தும் 3 நாட்கள் மாநாட்டில் இளம் அரசியல் தலைவராக உரையாற்ற சிறப்பு விருந்தினராக பங்கேற்க இன்று அமெரிக்கா பயணம் மேற்கொள்கிறார் தமிழக பா.ஜ.க செயலாளர் எஸ்.ஜி.சூர்யா. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயின்ட் லூயிஸ் நகரில் உள்ள NRI வாசவி சங்கத்தில் (NRIVA) உரையாற்றுவதற்கு தமிழக பாஜக மாநில செயலாளர் டாக்டர் எஸ்.ஜி.சூர்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ளார்.
NRIVA-இன் 7வது உலகளாவிய மாநாடு 2024, ஜூலை 4 ஆம் தேதி முதல் தொடங்கி ஜூலை 7ஆம் தேதி வரை அமெரிக்காவின் மிசோரி, செயின்ட் லூயிஸில் உள்ள மையத்தில் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு தான் இளம் தலைவரான தமிழக பா.ஜ.க செயலாளர் எஸ்.ஜி.சூர்யா உரையாற்ற சிறப்பு விருந்தினராக பங்கேற்க இருக்கிறார். அதன் காரணமாக அவர் இன்று அமெரிக்காவிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
எஸ்.ஜி.சூர்யா அவர்கள் தமிழக பா.ஜ.கயில் குறிப்பிடத்தக்க இளம் தலைவர் ஆவார். இதற்கு முன்னதாக அரசாங்கத்தால் இஸ்ரேலுக்கு அழைக்கப்பட்டார். 2018 இல் இஸ்ரேலின் 10 நாள் இளைஞர் பரிமாற்ற நிகழ்ச்சிக்காக இந்தியாவில் வளர்ந்து வரும் இளம் அரசியல் தலைவர்களில் ஒருவராக எஸ்.ஜி.சூர்யா அவர்கள் கலந்து கொண்டார். பின்னர், 2019 இல், எஸ்.ஜி.சூர்யா தென் கொரியாவிற்கு 12 நாட்களுக்கு இந்திய இளைஞர் தலைவர்கள் குழுவில் ஒரு பகுதியாக இருந்தார். எஸ்.ஜி.சூர்யா தற்போது தமிழ்நாடு மாநிலத்தில் பா.ஜ.கவின் மாநிலச் செயலாளராக பணியாற்றுகிறார். மேலும் பாஜக வரலாற்றில் இந்த பதவியை வகிக்கும் இளையவர் இவர்தான் என்பதும் கூடுதல் தகவல்.
Input & Image courtesy:The Commune News