Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரையில் எம்.பி சு.வெங்கடேசனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் : வ.உ.சி இளைஞர் பேரவை எச்சரிக்கை!

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கூறிய செங்கோல் பற்றிய கருத்திற்கு தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் எம்.பி சு.வெங்கடேசனுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் : வ.உ.சி இளைஞர் பேரவை எச்சரிக்கை!

KarthigaBy : Karthiga

  |  2 July 2024 6:16 PM GMT

இந்திய சுதந்திர போராட்ட வரலாறு தெரியாமல், சுதந்திர தினத்தில் செங்கோல் பற்றி புரிதல் இல்லாத வெற்று விளம்பரத்திற்காக நாடாளுமன்றத்தில் செங்கோலைப் பற்றி தரக்குறைவாக பேசியுள்ளார் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர். இன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் நின்று கருத்தை பதிவு செய்கின்றார் என்றால் அதற்கு சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட வேளாளர்கள் தியாகமும், சுதந்திரதினத்தன்று வேளாள ஆதீனம் வழங்கிய செங்கோலைத் தாங்கி ஆங்கிலேயர்களிடம் சுதந்திரத்தை பெற்று தந்ததின் விளைவும்தான் இன்று மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செங்கோல் பற்றிய சர்ச்சை பேச்சானது.

பிஜேபியை எதிர்ப்பதாக நினைத்து கொண்டு, சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தையும், சைவ ஆதீனம் செங்கோல் பற்றியும் தவறான, விரும்பதகாத கருத்தினை பதிவு செய்வது கண்டனத்திற்குரியது. மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் தன்னுடைய வெற்றிக்கு பாடுபட்ட மதுரை வேளாளர் சமூதாய மக்களையும்,வேளாள இனத்தையும் இழிவுப்படுத்தும் வகையில் பேசியிருப்பது வேதனை அளிக்கிறது.

மதுரையில் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை அரசியல் ரீதியாக தோழர்க்கு ஆதரவு கொடுத்திருந்தாலும், தன் இனத்திற்கு ஒரு பிரச்சனை வரும்போது இனத்தின் மாண்பே எங்களுக்கு முக்கியம். அரசியல் ஆதரவு நிலைப்பாடு வேறு. ஆதரவு கொடுத்தோம் என்பதற்காக தனது இனத்தினை இழிவுப்படுத்தி பேசினால் தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை வேடிக்கை பார்க்காது.

மதுரை நாடாளுமன்ற உறுப்பினரின் தான்தோன்றிதனமான பேச்சுக்கு தமிழ்நாடு வ.உ.சி இளைஞர் பேரவை தனது கடும் கண்டனத்தை பதிவு செய்வதோடு, தோழர் சு.வெங்டேசன் தனது கருத்தை திரும்ப பெற வேண்டும் எனவும், தோழர் கருத்தை திரும்ப பெறவில்லையெனில் மதுரையில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறாக வ.உ.சி இளைஞர் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News