Kathir News
Begin typing your search above and press return to search.

இந்தியா- சீனா எல்லைப் பிரச்சினையைத் தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்!

சீன அமைச்சரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்தார்.இதன் மூலம் இந்தியா - சீனாஎல்லைப் பிரச்சனைக்கு தீர்வு காண இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா- சீனா எல்லைப்   பிரச்சினையைத் தீர்க்க இரட்டிப்பு முயற்சிக்கு ஒப்புதல்!
X

KarthigaBy : Karthiga

  |  5 July 2024 3:25 PM GMT

எல்லைப் பிரச்சினையை தீர்ப்பதற்கான முயற்சிகளை இரட்டிப்பாக்க சீனா ஒப்புக்கொண்டிருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சருடனான சந்திப்புக்குப் பிறகு இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.இந்தியா சீனா ரஷ்யா உள்ளிட்ட பத்து உறுப்பு நாடுகளைக் கொண்ட ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாடு கஜகஸ்தான் நாட்டின் அஸ்தானா நகரில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்பதற்காக சென்றுள்ள ஜெய்சங்கர் மாநாட்டின் இடையே சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்-இ-யை நேற்று சந்தித்து பேசினார். பின்னர் இந்த சந்திப்பு குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் சீன பகுதிகளில் எஞ்சியுள்ள பிரச்சனைகளுக்கு விரைவில் தீர்வு காண்பது குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது .அந்த நோக்கத்துக்காக ராஜதந்திரம் மற்றும் ராணுவ வழிகள் மூலம் முயற்சிகளை இரட்டிப்பாக்க ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை மதித்து எல்லைப் பகுதிகளில் அமைதியை உறுதி செய்வது அவசியம் . பரஸ்பர மரியாதை, பரஸ்பர உணர்வு மற்றும் பரஸ்பர நலன் ஆகிய மூன்றும் நமது இருதரப்பு உறவுகளை வழிநடத்தும் என்று தெரிவித்துள்ளார். முன்னதாக கஜகஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் முராத்-நூர்ட்லு, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கி லாரோவ் பெலாரஸ், வெளியுறவுத்துறை அமைச்சர் மாக்சிம் ரைசென்கோவ், தஜிகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் சிராஜுதீன் முஹ்ரிதீன், ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ கட்டரஸ் உள்ளிட்டோரை ஆஸ்தானாவில் ஜெய்சங்கர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.


SOURCE :News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News