கிராமப்புறத்தில் தொடரும் கிறிஸ்துவ மதமாற்றம்.. கொந்தளித்த இந்து முன்னணி..
By : Bharathi Latha
இந்து மக்களை குறிவைத்து மத மாற்றம்:
இந்து மக்களை குறி வைத்து தான் மதமாற்றம் என்ற செயல் அரங்கேறி வருகிறது. அது என்னவென்றால், ஏழை எளிய இந்து மக்களை குறிவைத்து சுலபமாக மதமாற்றம் செய்து விடலாம் என்று எண்ணுகிறார்கள். மதமாற்றம் தற்போது மிகவும் சாதாரணமாக பொதுவெளிகளில் சுலபமாக நடக்கிறது. அதுவும் கிராமத்தில் கூட இந்த சம்பவம் அரங்கேறி இருப்பது தற்போது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் நெருக்கமாக இருக்கக்கூடிய கிராமங்களில் கூட இத்தகைய மதமாற்றும் முயற்சிகள் நடைபெறுவதைக் கண்டு இந்து முன்னணி கோபம் அடைந்து இருக்கிறது.
தடுத்து நிறுத்திய இந்து முன்னணி:
அந்த வகையில் தற்போது விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருச்சுழி ஒன்றியம், தும்முசினம்பட்டி கிராமத்தில் காவல் துறை அனுமதி இல்லாமல் திருநெல்வேலியில் இருந்து இரண்டு வேனில் கிறிஸ்துவ மத மாற்ற கும்பல் சுமார் 30 நபர்கள் பெரும்பான்மையாக இந்துக்கள் வாழும் பகுதியில் வந்து தெருமுனை பிரச்சாரம் செய்து கொண்டு இருந்தனர். இந்த தகவல் அறிந்து அந்த கிராமத்தை சேர்ந்த இந்து முன்னணி திருச்சுழி ஒன்றிய பொது செயலாளர் ரெட்டியாபட்டி காவல் நிலைய அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு தகவல் கொடுத்து இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் காவல் துறை மற்றும் கிராம பொது மக்கள், இந்து முன்னணி பொறுப்பாளர்களுடன் கிறிஸ்துவ மத மாற்ற கும்பலை விரட்டி அனுப்பினர்.
இப்படி இந்து மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் அதிகமான மதமாற்றம் நடைபெற்று வருவதாகவும் இந்து முன்னணியினர் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
Input & Image courtesy:News