Kathir News
Begin typing your search above and press return to search.

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் புதிய டவர் திறப்பதில் தொடரும் கால தாமதம்...அவதியுறும் நோயாளிகள்..!

மதுரை ராஜாஜி மருத்துவமனையின் புதிய டவர் திறப்பதில் தொடரும் கால தாமதம்...அவதியுறும் நோயாளிகள்..!
X

SushmithaBy : Sushmitha

  |  10 July 2024 3:41 PM GMT

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் புதிய கட்டிட திறப்பு விழா முடிந்து நான்கு மாதங்கள் ஆகிய நிலையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிய கட்டிடம் திறக்கப்படாமல் மூடியே உள்ளது. இது அரசு மருத்துவமனையையே பெரிதும் நம்பியுள்ள மக்களை தவிக்க வைத்துள்ளது.

அதிலும் குறிப்பாக தனியார் மருத்துவமனைகளில் அதிக செலவு செய்ய முடியாதவர்கள், அரசு மருத்துவமனை திறப்பதில் ஏற்படும் தாமதத்தால் சிகிச்சை பெற முடியாமல் கடும் அவஸ்தையில் உள்ளனர். அதுமட்டுமின்றி, மதுரை அனுப்பானடியை சேர்ந்த வயதான பாட்டி ஒருவர் தனது பேரனின் சிகிச்சை குறித்து மிகவும் வேதனை தெரிவித்துள்ளார்.

அதாவது கடந்த நான்கு ஆண்டுகளாக, தாயின் மறைவிற்குப் பிறகு, தந்தையால் கைவிடப்பட்ட 10 வயது சிறுவனிற்கு அவசரமாக இதய அறுவை சிகிச்சை தேவைப்படுகிறது. ஆனால் சிறுவனுக்கு ஆதரவாக இருப்பது அவனது வயதான பாட்டி ஒருவர் மட்டுமே, தனது வயது முதிர்வு மற்றும் வசதியின்மையால் தனியார் மருத்துவமனையில் தனது பேரனுக்கு சிகிச்சை அளிக்க முடியாமலும், அரசு மருத்துவமனையிலும் அறுவை சிகிச்சை செய்ய முடியாமலும் தவித்து வருவதாக தனது விரக்தியை தெரிவித்துள்ளார். இப்படி தென் தமிழகத்தில் உள்ள ஆயிரக்கணக்கானோர் தேவையான மருத்துவ வசதிகளை பெற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர்.

313.25 கோடி செலவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையின் புதிய டவர் பிளாக்கில் மருத்துவர்கள் உட்பட 779 மருத்துவ பணியாளர்கள் இதுவரை பணியமர்த்தப்படாமலே உள்ளனர். இருப்பினும் புதிய கட்டிடத்திற்கான மருத்துவ கருவிகள் அனைத்தும் வந்த பிறகும் முக்கிய பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறையால் இதுவரை அரசு மருத்துவமனையின் புதிய கட்டிடம் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் பொதுப்பணித்துறையின் பணிகள் நடந்து வருவதால், புதிய டவர் பிளாக்கை முழுமையாக திறப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளது. அதனால் பணிகள் முடிவடையும் வரை, மருத்துவமனையின் கதவுகளை பொதுமக்களுக்கு திறக்க முடியாது என்று கூறப்படுகிறது. ஆனால் அரசு மருத்துவமனை திறப்பதில் ஏற்படும் இந்த தாமதத்தினால் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகின்ற நோயாளிகள் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

Source : The Commune

Next Story
கதிர் தொகுப்பு
Trending News