Kathir News
Begin typing your search above and press return to search.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை : புது வெடியை தூக்கிப்போட்ட அண்ணாமலை!

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகை என்றும் அவர் மீது ஏகப்பட்ட குற்றவியல் வழக்குகள் இருப்பதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை : புது வெடியை தூக்கிப்போட்ட அண்ணாமலை!
X

KarthigaBy : Karthiga

  |  11 July 2024 6:18 PM GMT

காந்தி வழி வந்தேன் என்று நாடகம் ஆடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? என கேள்வி எழுப்பியுள்ள தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செல்வப்பெருந்தகை வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார் எனவும் தெரிவித்துள்ளார். குற்றப் பதிவேடு பட்டியலிலும் ,ரௌடிகள் பட்டியலிலும் எனது பெயர் இருப்பதாகக் கூறி என் மீது அவதூறு பரப்பிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்காவிட்டால் அவர் மீது அவதூறு வழக்கு எஸ்.சி.எஸ்.டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு தொடரப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை எச்சரித்து இருந்தார் இதற்கு பதில் அளித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகையை குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்று தன்னை குறிப்பிட்டதற்கு, மகாத்மா காந்தி வழி வந்த தன்னை அவமானப்படுத்தி விட்டதாக மிகவும் வருத்தப்பட்டு இருக்கிறார் . மகாத்மா காந்தி வழிவந்த செல்வப் பெருந்தகை கடந்து வந்த பாதை ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு - முக்கிய குற்றவாளி, சிபிஐ வழக்கு ஊழல் தடுப்புச் சட்டம் 1988, இபிகோ 307 , கொலை முயற்சி, தாக்குதல், கொலை மிரட்டல், இ.பி.கோ 324 - பயங்கர ஆயுதங்களால் தாக்குதல், இபிகோ 506 - கொலை மிரட்டல், இறுதியாக குறிப்பிட்ட வழக்கில் அவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொலை முயற்சி வழக்கு, கொலை மிரட்டல் வழக்கு, பயங்கர ஆயுதங்களால் தாக்கிய வழக்கு , பயங்கர ஆயுதங்களைப் பயன்படுத்தி கலவரம் செய்த வழக்கு, வெடி பொருள்கள் வழக்கு, கொலை வழக்கு என பல வழக்குகள் தமிழகத்தில் மோசமான குற்ற வழக்குகள் தான். குறிப்பாக மூன்று கொலை மிரட்டல் வழக்குகள் மட்டுமே அவர் மீது தொடரப்பட்டிருந்தன. இது தவிர ஆடிட்டர் பாண்டியன் கொலை வழக்கு, குண்டர் சட்டத்தில் அவர் கைது செய்யப்பட்டிருப்பதை இல்லை என்கிறாரா?இவரை வேறு எப்படி குறிப்பிட வேண்டும் ?வாழும் மகாத்மா என்றா?

அரசியல் லாபங்களுக்காகவும் தன் மீதுள்ள குற்ற வழக்குகளில் இருந்து தப்பிக்கவும் தனது கொள்கைக்கு நேரெதிர் கட்சியில் இணைந்து காந்தி வழி வந்தேன் என்று நாடகமாடினால் செய்த குற்றங்கள் இல்லை என்று ஆகிவிடுமா? அவர் குற்றவாளிகள் பட்டியலில் இருந்தவர் என்ற கருத்தில் இருந்த நான் பின்வாங்கப் போவதில்லை. செய்யாத தவறுக்கு மன்னிப்பு கேட்கும் பழக்கமும் எனக்கு இல்லை. அவர் எங்கு வேண்டுமானாலும் வழக்கு தொடரட்டும் .அவரை நீதிமன்றத்தில் சந்திக்க நான் தயாராக இருக்கிறேன். இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.


SOURCE :Newspaper

Next Story
கதிர் தொகுப்பு
Trending News