Kathir News
Begin typing your search above and press return to search.

செயல்பாட்டுக்கு வந்த புனே விமான நிலையத்தின் புதிய முனையம்...உலகளவில் இடம் பிடிக்கும் இந்தியா

செயல்பாட்டுக்கு வந்த புனே விமான நிலையத்தின் புதிய முனையம்...உலகளவில் இடம் பிடிக்கும் இந்தியா
X

SushmithaBy : Sushmitha

  |  15 July 2024 9:45 PM IST

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்ட புனே விமான நிலையத்தின் புதிய முனையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜூலை 14 இருந்து அதிகாரப்பூர்வமாக செயல்பட தொடங்கியுள்ளது. முன்னதாக 22 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆண்டிற்கு ஏழு மில்லியன் பயணிகளை கையாளும் திறன் கொண்ட இந்த விமான நிலையம் தற்போது ரூபாய் 475 கோடி மதிப்பளவில் 52 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் ஆண்டுதோறும் ஒன்பது மில்லியன் பயணிகளை கையாள கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த முனையம் தொடங்கப்பட்ட முதல் நாளிலே ஒன்பது டெர்மினல்களிலும் ஒன்பது விமானங்கள் புறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புனே விமான நிலைய இயக்குனரான சந்தோஷ் தோக், இன்றிலிருந்து (திங்கள்) இரண்டு விமான நிறுவனங்களும் புதிய கட்டிடத்தில் இருந்து சுமார் 16 வருகைகள் மற்றும் 16 புறப்பாடுகளை இயக்கும் என்று அறிவித்தார்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் உருவாக்கப்பட்ட விமான உள்கட்டமைப்பு மிகவும் பிரம்மாண்டமாகவும், உலக அரங்கிற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றும், உலக அளவில் இந்தியாவை மூன்றாவது பெரிய விமான போக்குவரத்து துறையாக பிரதமர் மோடி அரசு நிலை நிறுத்தி உள்ளது என்றும், புகழாரம் சூட்டப்பட்டது.

அதோடு, இங்கு 10 ஏரோபிரிட்ஜ்கள், ஐந்து பேக்கேஜ் கொணர்விகள், 34 கவுண்டர்கள் மற்றும் 25 சுய-செக்-இன் நிலையங்கள் உட்பட பல நவீன வசதிகளைக் கொண்டுள்ளது என்று அதிகாரி தெரிவித்துள்ளனர்.

Source : Swarajya

Next Story
கதிர் தொகுப்பு
Trending News